×

ரஜினி – அஜித் ரசிகர்கள் மோதல் – டிரெய்லருக்கு இந்த அக்கப்போறா?

பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் டிரெய்லரில் வரும் வசனங்களை வைத்து அதை தனிப்பட்ட தாக்குதலாக மாற்றி சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் மீம்ஸ்களாகவும், கருத்துகளாகவும் தெரிவித்து வருகின்றனர். வருகிற பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வெளியாகவுள்ளது. இந்நிலையில்தான், கடந்த 28ம் தேதி பேட்ட படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் இடம் பெற்ற காட்சிகள் மற்றும் பஞ்ச் வசனங்களில் பழைய ரஜினியை பார்ப்பதாக பலரும் கூறிவந்தனர். அதேபோல், பேட்ட பட டிரெய்லருக்கு போட்டியாக அஜித் நடித்த விஸ்வாசம் டிரெய்லரும்
 
ரஜினி – அஜித் ரசிகர்கள் மோதல் – டிரெய்லருக்கு இந்த அக்கப்போறா?

பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் டிரெய்லரில் வரும் வசனங்களை வைத்து அதை தனிப்பட்ட தாக்குதலாக மாற்றி சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் மீம்ஸ்களாகவும், கருத்துகளாகவும் தெரிவித்து வருகின்றனர்.

வருகிற பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வெளியாகவுள்ளது. இந்நிலையில்தான், கடந்த 28ம் தேதி பேட்ட படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் இடம் பெற்ற காட்சிகள் மற்றும் பஞ்ச் வசனங்களில் பழைய ரஜினியை பார்ப்பதாக பலரும் கூறிவந்தனர். அதேபோல், பேட்ட பட டிரெய்லருக்கு போட்டியாக அஜித் நடித்த விஸ்வாசம் டிரெய்லரும் 30ம் தேதி வெளியானது. எனவே, இதுவரை சண்டை போடாமல் இருந்து வந்த ரஜினி ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் மோத துவங்கி விட்டனர்.

பேட்ட படத்தில் ரஜினி பேசும் ‘எவனுக்காவது குடும்பம், பொண்டாட்டி, புள்ளை, செண்டிமெண்ட் இருந்தா ஓடிப்போயிடு. கொலை காண்டுல இருக்கேன்…கொல்லாம வுடமாட்டேன்’ என ரஜினி பேசும் வசனம் அஜித்தின் விஸ்வாசம் படத்தை குறிப்பிடுவதாக சிலர் பற்ற வைத்தனர். அஜித் பேசும் ‘என் பேரு தூக்குதுரை, என் மனைவி பேரு… என் மகள் பேரு’ இது என அஜித் பேசும் வசனத்தை ரஜினி பேசும் வீடியோவோடு இணைத்து மீம்ஸாக உருவாக்கியுள்ளனர்.

ரஜினி – அஜித் ரசிகர்கள் மோதல் – டிரெய்லருக்கு இந்த அக்கப்போறா?

அதேபோல், ஒத்தைக்கு ஒத்தை வாடா என அஜித் பேசுவது பேட்ட படத்தை எனவும் சிலர் மீம்ஸ் போட்டனர். மேலும், சில வெறி பிடித்த ரசிகர்கள், விஸ்வாசம் டிரெய்லரில் வில்லன் ‘என்கிட்ட இருக்குற பணத்துக்கு நான் நினைச்சா எல்லா ஏரியாவையும் வாங்குவேன்’ எனக்கூற, அஜித் ‘ஏறி மிதிச்சேன்னா ஏரியாவ இல்லை.. மூச்சு கூட வாங்க முடியாது’ என பேசுவது பேட்ட பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சரை பார்த்துதான் எனவும் கொளுத்தி விட்டனர்.

ரஜினி – அஜித் ரசிகர்கள் மோதல் – டிரெய்லருக்கு இந்த அக்கப்போறா?

மொத்தத்தில் பேட்ட – விஸ்வாசம் டிரெய்லர்கள் ரஜினி, அஜித் ரசிகர்களிடையே மோதலை உண்டாக்கியிருக்குறது. ஆனாலும், இது ஆரோக்கியமான சண்டையாக மாறி, பொங்கலுக்கு இரு படங்களும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைய வேண்டும் என்பதே பலரின் ஆவல்….

From around the web

Trending Videos

Tamilnadu News