×

ரஜினி சாரும், கமல் சாரும் கூட்டணி வைக்க வேண்டும் – விஷால் ட்வீட்!

Rajinikanth, Kamal Haasan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தான் விரைவில் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்று கூறியிருந்தார். நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் கடந்த ஆண்டே (2018) ‘மக்கள் நீதி மய்யம்’ என்று தனது கட்சியின் பெயரை அறிவித்து, அரசியல் பயணத்தை தொடங்கினார். தற்போது, வருகிற நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் கமல் கவனம் செலுத்திய வண்ணமுள்ளார். சமீபத்தில், ரஜினி ட்விட்டரில் “கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து,
 
ரஜினி சாரும், கமல் சாரும் கூட்டணி வைக்க வேண்டும் – விஷால் ட்வீட்!

Rajinikanth, Kamal Haasan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தான் விரைவில் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்று கூறியிருந்தார். நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் கடந்த ஆண்டே (2018) ‘மக்கள் நீதி மய்யம்’ என்று தனது கட்சியின் பெயரை அறிவித்து, அரசியல் பயணத்தை தொடங்கினார்.

தற்போது, வருகிற நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் கமல் கவனம் செலுத்திய வண்ணமுள்ளார். சமீபத்தில், ரஜினி ட்விட்டரில் “கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்…என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு கமல் “நன்றி ரஜினிகாந்த், என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே நாளை நமதே” என்று பதில் ட்விட் தட்டியிருந்தார். இந்நிலையில், பிரபல நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் “வரப்போகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி சாரும், கமல் சாரும் கூட்டணி வைக்க வேண்டும். அது நிச்சயம் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்” என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News