×

ரஜினி, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட இயக்குனர் –இதுதான் காரணமா ?

ரஜினி மற்றும் விஜய் ஆகியோரின் சூப்பர்ஸ்டார் மற்றும் இளையதளபதி பட்டங்களைப் பற்றி தவறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இயக்குனர் ராஜு முருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் ராஜுமுருகன். இவர் எழுத்தாளராகவும் ஆனந்தவிகடன் உள்ளிட்ட பத்திரிக்கைகளிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கலந்து கொண்ட முந்திரிகாடு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், ”யார் யாரோ சூப்பர் ஸ்டார், இளைய தளபதி என்று இருக்க,
 
ரஜினி, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட இயக்குனர் –இதுதான் காரணமா ?

ரஜினி மற்றும் விஜய் ஆகியோரின் சூப்பர்ஸ்டார் மற்றும் இளையதளபதி பட்டங்களைப் பற்றி தவறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இயக்குனர் ராஜு முருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் ராஜுமுருகன். இவர் எழுத்தாளராகவும் ஆனந்தவிகடன் உள்ளிட்ட பத்திரிக்கைகளிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கலந்து கொண்ட முந்திரிகாடு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், ”யார் யாரோ சூப்பர் ஸ்டார், இளைய தளபதி என்று இருக்க, நம்ம பையனுக்கும் ஒரு பேர் வச்சு விடுங்க” என்று சீமானிடம் அந்த திரைப்படத்தின் கதாநாயகனை சுட்டிக்காட்டி கூறியுள்ளார்.

இது ஒன்றுபோதாதா..? விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள், சமூக வலைத்தளங்ளில் ராஜு முருகனை விமர்சித்துப் பல பதிவுகளை பகிர்ந்து வந்தனர். இதனையடுத்து இயக்குனர் ராஜு முருகன், தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஒரு இசை வெளியீட்டு நிகழ்வில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் உற்சாகப்படுத்துவதற்காக பேசப்பட்ட விசயம் அது. வார்த்தைகள் தவறாக அமைந்ததற்கு வருந்துகிறேன். ரஜினி அவர்களும், விஜய் அவர்களும் தங்களது உழைப்பால், அர்ப்பணிப்பால் தமிழ் சினிவாவின் இந்த உச்சங்களைத் தொட்டவர்கள்.’ என வருத்தம் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News