×

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

நடிகர் ரஜினிகாந்த் பேருந்து நடத்துனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது சூப்பர்ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜினி வாலிப வயதில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தவர். அதன்பின் சினிமா நடிகனாகும் ஆசையில் சென்னை வந்து சிறுசிறு வேடங்கள், வில்லன் என நடித்து பின் ஹீரோவாக மாறி தற்போது சூப்பர்ஸ்டாராகவும், தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாகவும் மாறியுள்ளார். விரைவில், அவரின் தர்பார் திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும், வருகிற டிசம்பர் 12ம் தேதி அவர் தனது பிறந்த நாளை
 
பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

நடிகர் ரஜினிகாந்த் பேருந்து நடத்துனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

தற்போது சூப்பர்ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜினி வாலிப வயதில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தவர். அதன்பின் சினிமா நடிகனாகும் ஆசையில் சென்னை வந்து சிறுசிறு வேடங்கள், வில்லன் என நடித்து பின் ஹீரோவாக மாறி தற்போது சூப்பர்ஸ்டாராகவும், தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாகவும் மாறியுள்ளார். விரைவில், அவரின் தர்பார் திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும், வருகிற டிசம்பர் 12ம் தேதி அவர் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

இந்நிலையில், அவர் கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்டது என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

இது ரஜினியின் அரிய புகைப்படம் எனக்கூறி அவரின் ரசிகர்கள் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News