×

லோகேஷ் கனகராஜுக்கு அழைப்பு விடுத்த ரஜினி – பரபரக்கும் கோடம்பாக்கம்

கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினியை நேரில் சந்தித்து உரையாடிய சம்பவம் கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை லோகேஷ் கனகராஜுக்கு ரஜினி வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. எனவே, அங்கு சென்ற அவர் சில மணி நேரங்கள் பேசிவிட்டு சென்றுள்ளார். எனவே, சிவாவிற்கு
 
லோகேஷ் கனகராஜுக்கு அழைப்பு விடுத்த ரஜினி – பரபரக்கும் கோடம்பாக்கம்

கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினியை நேரில் சந்தித்து உரையாடிய சம்பவம் கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை லோகேஷ் கனகராஜுக்கு ரஜினி வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. எனவே, அங்கு சென்ற அவர் சில மணி நேரங்கள் பேசிவிட்டு சென்றுள்ளார். எனவே, சிவாவிற்கு பின் ரஜினியை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் லோகேஷ் கனகராஜும் இணைந்துள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில், மாநகரம் திரைப்படத்த பார்த்த ரஜினி லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். அதேபோல் 2 நாட்களுக்கு முன்பு முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அவர் தனது பிறந்த நாளை முன்னதாகவே கொண்டாடினார். அந்த விழாவிற்கு லோகேஷ் கனராஜுக்கு அழைப்பு சென்று, அவரும் அதில் கலந்து கொண்டார்.

எனவே, சிவாவிற்கு பின் லோகேஷ் கனகராஜ் ரஜினியை இயக்குவாரா அல்லது இது சாதாரண சந்திப்பாக முடியுமா என்பது விரைவில் தெரிய வரும்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News