×

ரஜினி, அஜித்துடன் மோதுவது தற்கொலைக்கு சமம் – விளக்கம் அளித்த பிரபல நடிகர்!

பிரபல ஆர்.ஜே-வான பாலாஜி பல படங்களில் காமெடியனாக அசத்தி வந்தார். தற்போது, ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக களமிறங்கியுள்ள படம் ‘எல்.கே.ஜி’ (LKG). இந்த படத்தை பிரபு என்பவர் இயக்கியுள்ளார். அரசியல் கதைக்களம் கொண்ட படமான இதில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் டூயட் பாடி ஆடியுள்ளார். ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு ஆர்.ஜே.பாலாஜியே கதை-திரைக்கதை-வசனம் எழுதியுள்ளார். இந்த படம் இன்று (பிப்ரவரி 22-ஆம் தேதி) ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி
 
ரஜினி, அஜித்துடன் மோதுவது தற்கொலைக்கு சமம் – விளக்கம் அளித்த பிரபல நடிகர்!

பிரபல ஆர்.ஜே-வான பாலாஜி பல படங்களில் காமெடியனாக அசத்தி வந்தார். தற்போது, ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக களமிறங்கியுள்ள படம் ‘எல்.கே.ஜி’ (LKG). இந்த படத்தை பிரபு என்பவர் இயக்கியுள்ளார்.

அரசியல் கதைக்களம் கொண்ட படமான இதில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் டூயட் பாடி ஆடியுள்ளார். ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு ஆர்.ஜே.பாலாஜியே கதை-திரைக்கதை-வசனம் எழுதியுள்ளார். இந்த படம் இன்று (பிப்ரவரி 22-ஆம் தேதி) ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி அளித்த பேட்டி ஒன்றில் “முதலில் இந்த படத்தை கடந்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யலாம் என ப்ளான் பண்ணோம். ஆனால், ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்கள் அதே தேதியில் வெளியானதால் நாங்கள் பின் வாங்கிட்டோம். ரஜினி, அஜித் இருவருடனும் மோதுவது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்” என்று தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News