×

கமல் நடித்த படத்தை 40 முறை பார்த்த ரஜினி – எந்த படம் தெரியுமா?

நடிகர் மற்றும் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் துவங்கியுள்ளார். இதில், ரஜினி உட்பட பல திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த அலுவலகத்தின் முன்பு இயக்குனர் மற்றும் தனது திரையுலக குருவான பாலச்சந்திரின் உருவ சிலையை ரஜினி மற்றும் கமல்ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர். அதன்பின், அந்த விழாவில் ரஜினியும், கமலும் பல விஷயங்களை மனம் விட்டு பேசினர். இந்த விழாவில் பேசிய ரஜினி ‘ராஜ்கமல்
 
கமல் நடித்த படத்தை 40 முறை பார்த்த ரஜினி – எந்த படம் தெரியுமா?

நடிகர் மற்றும் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் துவங்கியுள்ளார். இதில், ரஜினி உட்பட பல திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த அலுவலகத்தின் முன்பு இயக்குனர் மற்றும் தனது திரையுலக குருவான பாலச்சந்திரின் உருவ சிலையை ரஜினி மற்றும் கமல்ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர். அதன்பின், அந்த விழாவில் ரஜினியும், கமலும் பல விஷயங்களை மனம் விட்டு பேசினர்.

இந்த விழாவில் பேசிய ரஜினி ‘ராஜ்கமல் பிலிம்ஸ் எடுத்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அபூர்வ சகோதரர்கள் எனவும், அபூர்வ சகோதரர்கள் படம் பார்த்து நள்ளிரவு நேரத்தில் கமல் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்து பாராட்டினேன் எனவும் ரஜினி பேசினார். மேலும், ராஜ்கமல் பிலிம்ஸ் எடுத்த தேவர்மகன் திரைப்படம் ஒரு மிகப்பெரிய காவியம்.

கமலின் ஹேராம் திரைப்படத்தை இதுவரை 30 முதல் 40 முறை பார்த்து உள்ளேன். மார்லன் பிராண்டோவின் காட் ஃபாதர், சிவாஜியின் திருவிளையாடல் படத்திற்கு பிறகு அடிக்கடி ஹேராம் படத்தை பார்த்துள்ளேன். பாலச்சந்தருக்கு மிக மிக பிடித்த குழந்தை கமல்ஹாசன் தான். படப்பிடிப்பு தளத்தில் கமல் தூங்குவதை கூட பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார் பாலச்சந்தர்’ என ரஜினி பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News