×

ரஜினி வீட்டில் விரைவில் டும் டும் டும்! பத்திரிகை ரெடி ஆகிருச்சு!!!

ரஜினியின் மகள் சௌந்தர்யா மற்றும் தன் தாய் லதா ரஜினிகாந்துடன் திருப்பதிக்கு சென்று தன் மறுமண பத்திரிகையை ஏழுமலையான் பாதையில் வைத்து பூஜித்துள்ளார். ரஜினியின் மகள் சௌந்தர்யா 2010ம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஷ்வினை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இருவரும் விவாகரத்து பெற்றனர். தற்போது சௌந்தர்யா விசாகன் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் செய்திகள் பரவியது.
 
ரஜினி வீட்டில் விரைவில் டும் டும் டும்! பத்திரிகை ரெடி ஆகிருச்சு!!!

ரஜினியின் மகள் சௌந்தர்யா மற்றும் தன் தாய் லதா ரஜினிகாந்துடன் திருப்பதிக்கு சென்று தன் மறுமண பத்திரிகையை ஏழுமலையான் பாதையில் வைத்து பூஜித்துள்ளார்.

ரஜினியின் மகள் சௌந்தர்யா 2010ம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஷ்வினை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இருவரும் விவாகரத்து பெற்றனர்.

தற்போது சௌந்தர்யா விசாகன் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் செய்திகள் பரவியது. கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பொன்முடியின் சகோதரரும், தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன்தான் இந்த விசாகன். இவர் வஞ்சகர் உலகம் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

விசாகனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இவர் தமிழகத்தில் மருந்துகளை விற்பனை செய்யும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான Apex- ஐ நடத்தி வருகிறார்.நடிகர் ரஜினிகாந்த்  இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்ததுடன் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம்  நடந்து முடிந்ததாக தகவல் வெளியானது.

ரஜினி வீட்டில் விரைவில் டும் டும் டும்! பத்திரிகை ரெடி ஆகிருச்சு!!!

இந்நிலையில் தற்போது தன் தாய் லதா ரஜினிகாந்த் மற்றும் நெருங்கிய 20 நண்பகளுடன்  திருப்பதி சென்ற சௌந்தர்யா அங்குள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சென்று  சிறப்பு தரிசனம் செய்துள்ளார்.அப்போது தன் மறுமண பத்திரிகையை ஏழுமலையான் பாதையில் வைத்து பூஜித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News