×

ரம்யா கிருஷ்ணன் 37 டேக்… விஜய் சேதுபதி 80 டேக் – சூப்பர் டீலக்ஸ் ரகசியம்

Ramya krishnan : சூப்பர் டீலக்ஸ் படத்தில் முதல் கட்சியில் நடிக்க விஜய் சேதுபதி 80 டேக் வாங்கியது தெரியவந்துள்ளது. ஆரண்ய காண்டம் படம் மூலம் கவனத்தை ஈர்த்த தியாகராஜா குமாரராஜா இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின், மலையாள நடிகர் பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் வருகிற 29ம்
 
ரம்யா கிருஷ்ணன் 37 டேக்… விஜய் சேதுபதி 80 டேக் – சூப்பர் டீலக்ஸ் ரகசியம்

Ramya krishnan : சூப்பர் டீலக்ஸ் படத்தில் முதல் கட்சியில் நடிக்க விஜய் சேதுபதி 80 டேக் வாங்கியது தெரியவந்துள்ளது.

ஆரண்ய காண்டம் படம் மூலம் கவனத்தை ஈர்த்த தியாகராஜா குமாரராஜா இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின், மலையாள நடிகர் பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் வருகிற 29ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரம்யா கிருஷ்ணன் 37 டேக்… விஜய் சேதுபதி 80 டேக் – சூப்பர் டீலக்ஸ் ரகசியம்

இப்படம் பற்றி கருத்து தெரிவித்த ரம்யா கிருஷ்ணன் “என்னை தியாகராஜா குமாரராஜா சந்தித்த போது என்னுடைய முதல் காட்சி சிறப்பாக இருக்க வேண்டும்” என அவரிடம் கூறினேன். அவரும் முயற்சி செய்வோம் எனக்கூறினார். ஆனால், முதல் காட்சியில் 37 டேக் வாங்கினேன். என் சினிமா வாழ்க்கையில் இதற்கு முன் நான் இத்தனை டேக்குகள் வாங்கியதே இல்லை. இதன் பின்பும் வாங்குவேனா தெரியாது. விஜய் சேதுபதி முதல் காட்சிக்காக 80 டேக்குகள் வாங்கியதாக தெரிவித்தார். ஆனால், அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், நான் நடிக்க தொடங்கிய பிறகுதான் அது புரிந்தது” என தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News