×

ரிஷப் பண்ட்டின் ஷாட் செலக்ஷன் பின்னடைவை தருகிறது – ரவி சாஸ்திரி வருத்தம் !

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இப்போது 38 வயதாகிறது. இந்நிலையில் தோனிக்குப் பிறகு புதிய விக்கெட் கீப்பராக ஒருவரை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இதற்காக ரிஷப் பண்ட்டுக்கு இந்திய அணி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதிரடியான ஆட்டத்துக்குப் பெயர் போன ரிஷப் பண்ட் சில மோசமான ஷாட்களால் ஆட்டமிழந்து சொதப்பி வருவது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘ சமீபத்தில் சில
 
ரிஷப் பண்ட்டின் ஷாட் செலக்ஷன் பின்னடைவை தருகிறது – ரவி சாஸ்திரி வருத்தம் !

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இப்போது 38 வயதாகிறது. இந்நிலையில் தோனிக்குப் பிறகு புதிய விக்கெட் கீப்பராக ஒருவரை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இதற்காக ரிஷப் பண்ட்டுக்கு இந்திய அணி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதிரடியான ஆட்டத்துக்குப் பெயர் போன ரிஷப் பண்ட் சில மோசமான ஷாட்களால் ஆட்டமிழந்து சொதப்பி வருவது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘ சமீபத்தில் சில போட்டிகளில் முதல் பந்திலேயே பண்ட் மோசமான ஷாட்களை விளையாடுவது ஏமாற்றமாக உள்ளது. அதுவும் எதிர்முனையில் கோஹ்லி போல வீரர்கள் அணியும் நல்ல நிலையில் இருக்கும்போது அவர் அவ்வாறு விளையாடுவது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துவதோடு அணிக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆட்டப் பாணியை யாராலும் மாற்ற முடியாது. அந்த மாதிரி ஷாட்களை விளையாடி அவுட் ஆவதை அவர் தவிர்த்தால் அவரைப்போன்ற ஒரு அதிரடி வீரரைப் பார்க்க முடியாது. ஆனால் அதற்கு ஆட்டத்தின் சூழ்நிலையைக் கணித்து விளையாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News