×

எல்லாம் புருஷன் ராசி: ஹிட் மேல ஹிட் … ஒரேடியா சம்பளத்தை உயர்த்திய சமந்தா!!

நடிகை சமந்தா யாரும் எதிர்பாராத வகையில் தனது சம்பளத்தை பெரும் தொகைக்கு உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர். ஆனால், இப்போது அதிகம் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான படம் ஓ பேபி. நந்தினி ரெட்டி இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ரிலீஸான ஒரு வாரத்திலேயே 17 கோடி ரூபாய் வசூலை
 
எல்லாம் புருஷன் ராசி: ஹிட் மேல ஹிட் … ஒரேடியா சம்பளத்தை உயர்த்திய சமந்தா!!

நடிகை சமந்தா யாரும் எதிர்பாராத வகையில் தனது சம்பளத்தை பெரும் தொகைக்கு உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர். ஆனால், இப்போது அதிகம் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான படம் ஓ பேபி.

நந்தினி ரெட்டி இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ரிலீஸான ஒரு வாரத்திலேயே 17 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓ பேபி படத்தின் வசூல் தற்போது வரை 40 கோடியை எட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமந்தா படத்தின் வெற்றியால் தனது சம்பளத்தை 1 கோடி ரூபாய் வரை உயர்த்தியுள்ளாராம். அதவாது இதுவரை 2 ரூபாயாக இருந்த அவரது சம்பளம் தற்போது 3 கோடியாக ஆக்கியுள்ளாராம். தயாரிப்பாளர்களும் சமந்தாவிற்கு இந்த சம்பளத்தை தர தயாராக உள்ளார்களாம்.

நடிகை சமந்தாவுக்கு திருமணத்திற்கு பிறகுதான் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்கிறது. அதற்கேற்ப சமந்தாவும் கதை தேர்வு செய்வதை சிறப்பாகவே செய்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News