×

ராதாரவியை செம்மயாய் கலாய்த்த சமந்தா !

நயன்தாராவிற்கு ஆதரவாக நடிகை சமந்தா குரல் கொடுத்துள்ளார் . ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரைலர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயன்தாராவை குறித்து கீழ்தரமாக விமர்சித்தார் . இதனால் நடிகர் ராதாரவிக்கு பலரும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் ,நடிகர் ராதாரவியை கண்டித்து அவரை திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்துள்ளார். அடுத்து நடிகர் விஷால் தன் பங்கிற்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பாக
 
ராதாரவியை செம்மயாய் கலாய்த்த சமந்தா !

நயன்தாராவிற்கு ஆதரவாக நடிகை சமந்தா குரல் கொடுத்துள்ளார் .

 

‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரைலர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயன்தாராவை குறித்து கீழ்தரமாக விமர்சித்தார் . இதனால் நடிகர் ராதாரவிக்கு பலரும் சமூக வலைதளங்களில்  கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் ,நடிகர் ராதாரவியை கண்டித்து அவரை திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்துள்ளார். அடுத்து நடிகர் விஷால் தன் பங்கிற்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ராதாரவிக்கு கண்டன கடித்தை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் பல திரைதுறையினரும் நயன்தாராவிற்கு ஆதரவாக ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகை சமந்தா தன் டிவிட்டர் பக்கத்தில்

ராதாரவியை செம்மயாய் கலாய்த்த சமந்தா !

மிஸ்டர். ராதாரவி நீங்கள் செய்தது சரி என்று நிரூபிக்க போராடுகிறீர்கள். உங்களை பார்த்தா எனக்கு பாவமாக இருக்குது. உங்களின் ஆன்மா அமைதியைத் தேட விரும்புகிறேன். அதற்காக நயன்தாராவின் சூப்பர் ஹிட் படத்தின் டிக்கெட் அனுப்புகிறேன்.மேலும் உங்கள் மன அமைதிக்காக பாப்கார்னோடு மாத்திரையையும் சேர்த்து சாப்பிடுங்கள்’ என்று  ராதாரவியை கிண்டலடித்து தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


சமந்தாவின் இந்த டிவிட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News