×

எகிறிய இளையராஜா.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட செக்யூரிட்டி (வீடியோ)

ILayaraja angry – இசை நிகழ்ச்சியில் மேடையில் இளையராஜா காவலாளியிடம் கோபப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இசைஞானி இளையராஜா இசைக்கு மட்டுமல்ல.. கோபத்திற்கும் பெயர் போனவர். எனவே, எந்த இடமானாலும் கோபத்தை அப்போதே அங்கேயே கொட்டி சர்ச்சையில் அவர் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட ஆண்மையில்லாத்தனம் என சில இசையமைப்பாளர்கள் கடுமையாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில், சமீபத்தில் அவரின் இசை நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடந்தது. நீண்ட நாட்களாக பிரிந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இளையராஜாவுடன் மீண்டும் இணைந்ததால்
 
எகிறிய இளையராஜா.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட செக்யூரிட்டி (வீடியோ)

ILayaraja angry – இசை நிகழ்ச்சியில் மேடையில் இளையராஜா காவலாளியிடம் கோபப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இசைஞானி இளையராஜா இசைக்கு மட்டுமல்ல.. கோபத்திற்கும் பெயர் போனவர். எனவே, எந்த இடமானாலும் கோபத்தை அப்போதே அங்கேயே கொட்டி சர்ச்சையில் அவர் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட ஆண்மையில்லாத்தனம் என சில இசையமைப்பாளர்கள் கடுமையாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில், சமீபத்தில் அவரின் இசை நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடந்தது. நீண்ட நாட்களாக பிரிந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இளையராஜாவுடன் மீண்டும் இணைந்ததால் இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இந்நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஒரு செக்யூரிட்டி (காவலாளி) மேடைக்கு வந்தார். அவரைக்கண்டு கோபமடைந்த இளையராஜா நிகழ்ச்சி நடைபெறும் போது தொந்தரவு செய்வது போல் ஏன் மேடைக்கு வருகிறீர்கள் என கோபமாக கேட்டார். தண்ணீர் கேட்டார்கள் கொண்டு வந்தேன் என செக்யூரிட்டி கூற இளையராஜா ஏற்கவே இல்லை. ஒரு கட்டத்தில் மன்னித்துவிடுங்கள் என அந்த செக்யூரிட்டி இளையராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த வீடியோவை சிலர் இணையத்தில் பகிர, இளையராஜா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News