×

விஜய்சேதுபதியை அடுத்து உதயநிதியுடன் கைகோர்க்கும் சீனுராமசாமி

விஜய்சேதுபதி நடித்த ‘தென்மேற்கு பருவக்காற்று, ‘தர்மதுரை போன்ற படங்களை இயக்கிய சீனுராமசாமி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாக சீனுராமசாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் என தெரிகிறது. உதயநிதி தற்போது பிரியதர்ஷன்
 
விஜய்சேதுபதியை அடுத்து உதயநிதியுடன் கைகோர்க்கும் சீனுராமசாமி

விஜய்சேதுபதியை அடுத்து உதயநிதியுடன் கைகோர்க்கும் சீனுராமசாமி

விஜய்சேதுபதி நடித்த ‘தென்மேற்கு பருவக்காற்று, ‘தர்மதுரை போன்ற படங்களை இயக்கிய சீனுராமசாமி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாக சீனுராமசாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் என தெரிகிறது. உதயநிதி தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News