×

லாஸ்லியாவின் தந்தையை போலவே இருக்கும் சேரன் – இப்ப புரியுதா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள லாஸ்லியாவின் தந்தை அப்படியே இயக்குனர் சேரனை போலவே இருப்பது தெரிய வந்துள்ளது. இலங்கையை சேர்ந்த லாஸ்லியா தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானதோடு, லாஸ்லியா ஆர்மியும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே #LosliyaArmy என்கிற ஹேஷ்டேக்கில் டிவிட்டரில் லாஸ்லியா ரசிகர்கள் அவர் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் அவரின் தந்தையின் புகைப்படத்தை, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இயக்குனர் சேரனுடன் ஒப்பிட்டு இருவரும்
 
லாஸ்லியாவின் தந்தையை போலவே இருக்கும் சேரன் – இப்ப புரியுதா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள லாஸ்லியாவின் தந்தை அப்படியே இயக்குனர் சேரனை போலவே இருப்பது தெரிய வந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானதோடு, லாஸ்லியா ஆர்மியும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே #LosliyaArmy என்கிற ஹேஷ்டேக்கில் டிவிட்டரில் லாஸ்லியா ரசிகர்கள் அவர் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் அவரின் தந்தையின் புகைப்படத்தை, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இயக்குனர் சேரனுடன் ஒப்பிட்டு இருவரும் ஒரே மாதிரி இருப்பதாகவும், இதனால்தான் அவர் சேரனுடன் நெருக்கமாக பழகுவதாகவும் பதிவிட்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடனேயே சேரனை தனது தந்தையாக லாஸ்லியா பார்க்க தொடங்கிவிட்டார். சோகமான நேரங்களில் அவரை கட்டிப்பிடித்தே அழுகிறார். சேரன் தன் தந்தையை போலவே இருப்பதாக அவர் விளக்கமும் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News