×

சிம்பு இல்லாத மாநாடு – வெங்கட்பிரபு ரியாக்‌ஷன் !

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாக இருப்பதாக ‘மாநாடு’ என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளையும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாராக வைத்திருந்தார் என்றும், இதனால் எந்த நேரத்திலும் இந்த படத்தின் படக்குழுவினர் மலேசியா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க சிம்பு ஒரு சில நிபந்தனைகளை விதித்ததாகவும், சிம்புவை இயக்க வெங்கட் பிரபு சில நிபந்தனைகள்
 
சிம்பு இல்லாத மாநாடு – வெங்கட்பிரபு ரியாக்‌ஷன் !

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாக இருப்பதாக ‘மாநாடு’ என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளையும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாராக வைத்திருந்தார் என்றும், இதனால் எந்த நேரத்திலும் இந்த படத்தின் படக்குழுவினர் மலேசியா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க சிம்பு ஒரு சில நிபந்தனைகளை விதித்ததாகவும், சிம்புவை இயக்க வெங்கட் பிரபு சில நிபந்தனைகள் விதித்ததாகவும் இரண்டு பேர்களின் நிபந்தனைகளை கேட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நொந்து போனதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாகப் புகைந்து கொண்டிருந்த மாநாடு விஷயம் இன்று வெடித்துவிட்டது. இன்று காலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கையில் ‘மாநாடு படம் சிம்பு இல்லாமல் விரைவில் உருவாகும். ஆனால் சிம்புவுடனான எனது நட்பும் அன்பும் தொடரும்’ எனத் தெரிவித்தார். இதையடுத்து சிம்பு ரசிகர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தும் வேளையில் வெங்கட் பிரபு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘எனது சகோதரர் சிம்புவுடன் பணியாற்றமுடியாமல் போனது மிகவும் எதிர்பாராமல் நிகழ்ந்துள்ளது. அனைத்துமே ஒரு கால எல்லைக்குள் இருக்கிறது. தயாரிப்பாளர் எதிர்கொண்ட அழுத்தங்களை பார்க்கையில் அவர் எடுத்த முடிவுக்கு நான் மதிப்பளிக்கிறேன். அனைவரது அன்புக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு இல்லாமல் மாநாடு படம் தயாராவது உறுதியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News