×

மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கம் – தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்க இருந்த மாநாடு படம் டிராப் செய்யப்படுவதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாக இருப்பதாக ‘மாநாடு’ என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளையும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாராக வைத்திருந்தார் என்றும், இதனால் எந்த நேரத்திலும் இந்த படத்தின் படக்குழுவினர் மலேசியா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்
 
மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கம் – தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்க இருந்த மாநாடு படம் டிராப் செய்யப்படுவதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாக இருப்பதாக ‘மாநாடு’ என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளையும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாராக வைத்திருந்தார் என்றும், இதனால் எந்த நேரத்திலும் இந்த படத்தின் படக்குழுவினர் மலேசியா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க சிம்பு ஒரு சில நிபந்தனைகளை விதித்ததாகவும், சிம்புவை இயக்க வெங்கட் பிரபு சில நிபந்தனைகள் விதித்ததாகவும் இரண்டு பேர்களின் நிபந்தனைகளை கேட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அம்மன் நொந்து போனதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்பு கன்னட ரீமேக் படம் ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்று விட்டா.ர் அதனால் வெறுத்துப்போன வெங்கட்பிரபுவும் வெப் சீரிஸ் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். வெப்சீரீஸ் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தப் படம் டிராப் ஆகிவிட்டது என சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாக அதைத் தொடர்ச்சியாக மறுத்து வந்தார் சுரேஷ் காமாட்சி.

இந்நிலையில் இன்று திடீரென மாநாடு படம் கைவிடப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘வணக்கம்… நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி… துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு “நடிக்க இருந்த” மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!

-சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்

From around the web

Trending Videos

Tamilnadu News