×

விஜய்க்கு மட்டும் சிறப்பு அனுமதியா: கோபத்தில் கோலிவுட்

தென்னிந்திய திரையுலகில் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டம் நடைபெற்று வருகிறது. மார்ச் 1ம் தேதியிலிருந்து புதிய படங்கள் எதுவும் வெளியீடு இல்லை என்று அறிவித்து தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் மார்ச் 16ஆம் தேதியிலிருந்து உள்ளூர், வெளியூர் எங்கும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என போராட்டம் நடைபெற்று வருவதால் அனைத்து திரையுலகமே முடங்கி கிடக்கிறது. புதிய படங்கள் நிறைய வெளிவரமுயாமல் தவித்து நிற்கிறது. பணத்தை போட்டு முதலீடு செய்தவா்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். எப்போது போராட்டம் நிறைவுக்கு
 
விஜய்க்கு மட்டும் சிறப்பு அனுமதியா: கோபத்தில் கோலிவுட்

விஜய்க்கு மட்டும் சிறப்பு அனுமதியா: கோபத்தில் கோலிவுட்

தென்னிந்திய திரையுலகில் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டம் நடைபெற்று வருகிறது. மார்ச் 1ம் தேதியிலிருந்து புதிய படங்கள் எதுவும் வெளியீடு இல்லை என்று அறிவித்து தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் மார்ச் 16ஆம் தேதியிலிருந்து உள்ளூர், வெளியூர் எங்கும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என போராட்டம் நடைபெற்று வருவதால் அனைத்து திரையுலகமே முடங்கி கிடக்கிறது. புதிய படங்கள் நிறைய வெளிவரமுயாமல் தவித்து நிற்கிறது.

பணத்தை போட்டு முதலீடு செய்தவா்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். எப்போது போராட்டம் நிறைவுக்கு வரும் படத்தை ரீலிஸ் செய்யலாம் என எதிர்பார்த்து காத்திருக்கின்ற வேளையில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 62 படத்தின் படப்பிடிப்பை நடத்த சிறப்பு அனுமதி வேண்டி தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இது மட்டுமல்லாமல் மேலும் 3 படங்களுக்கும் சிறப்பு அனுமதி கேட்கப்பட்டுள்ளதாம். இதை பற்றி தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அன்றாடம் வேலை செய்து தினக்கூலி வாங்கும் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தங்களுடைய முழு ஆதரவும், ஒத்தழைப்பும் கொடுத்து வருகின்றனர். ஆனால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் விஜய், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்களுக்கு மட்டும் ஏன் சிறப்பு அனுமதி கொடுக்க வேண்டும் என கோடம்பாக்க திரையுலகம் கொந்தளிப்பில் உள்ளதாக தெரிகிறது. இப்படி விஜய் படத்திற்கு சிறப்பு அனுமதி கொடுத்தால் தயாரிப்பாளர் சங்கமே இரண்டாகி விடும், வேலை நிறுத்த போராட்டமும் ஸ்தம்பித்து விடும் என்று கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News