×

அதிர வைக்கும் ‘அலாரம்’ – மிஸ் பண்ணாம பாருங்க

ஜீ5 இணையதளத்தில் வெளியாகியுள்ள ‘அலாரம்’ குறுந்தொடர் இணையதள ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பெண்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதனால் அந்த பெண்களின் வாழ்க்கையே சிதைந்து போகிறது. பாலியல் அடிமைகளாகவே அவர்கள் வார்க்கப்படுகிறார்கள். பல ஊர்களுக்கும், மாநிலங்களுக்கும் அவர்கள் அனுப்பப்பட்டு பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தும் கொடுமை சத்தமில்லாமல் பல நாடுகளில் நடைபெற்று வருகிறது.
 
அதிர வைக்கும் ‘அலாரம்’ – மிஸ் பண்ணாம பாருங்க

ஜீ5 இணையதளத்தில் வெளியாகியுள்ள ‘அலாரம்’ குறுந்தொடர் இணையதள ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பெண்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதனால் அந்த பெண்களின் வாழ்க்கையே சிதைந்து போகிறது. பாலியல் அடிமைகளாகவே அவர்கள் வார்க்கப்படுகிறார்கள். பல ஊர்களுக்கும், மாநிலங்களுக்கும் அவர்கள் அனுப்பப்பட்டு பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தும் கொடுமை சத்தமில்லாமல் பல நாடுகளில் நடைபெற்று வருகிறது.

அந்த இருண்ட உலகத்தை அலாரம் தொடர் படம் பிடித்துக் காட்டியுள்ளது. இது தொடர்பாக சில திரைப்படங்கள் இதற்கு முன்பு வெளியாகியுள்ளன. ஆனால், இதையே கதையின் அடிநாதமாக வைத்து அலாரம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற நகரங்களில் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு பின்னால் எத்தனை கும்பல் செயல்படுகிறது, பெரிய மனிதன் போர்வையில் கொடூர மனிதர்கள் இதையே தொழிலாக எப்படி செய்கிறார்கள்?, அவர்களுக்கு காவல் அதிகாரிகள் சிலர் எப்படி உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதை அலாரம் படம் பிடித்து காட்டுகிறது.

அதிர வைக்கும் ‘அலாரம்’ – மிஸ் பண்ணாம பாருங்க

சென்னையில் இளம்பெண்களை இரண்டு கும்பல் கடத்தி பாலியல் தொழிலுக்காக பயன்படுத்துகின்றனர். அந்த இரு கும்பலுக்கும் இடையே உள்ள தொழில் போட்டி, அவர்களுக்கு உதவும் கமிஷனர், மகளை தொலைத்து விட்டு தவிக்கும் ஒரு குறத்திப்பெண், அவரின் மகளோடு சேர்த்து மற்ற இளம் பெண்களையும் ஒரு காவல் அதிகாரி எப்படி மீட்கிறார் என்பவை அலாரம் குறுந்தொடரில் 12 அத்தியாங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இரவு நேரங்களில் ஆட்டோவில் செல்லும் ஒரு பெண்ணும், யாருமற்ற சாலையில் ஆண் நண்பருடன் நடந்து செல்லும் பெண்ணும் கடத்தப்படும் காட்சிகளோடு படம் தொடங்குகிறது. அப்படி கடத்தப்பட்ட தன்னுடைய 17 வயது மகளை காணவில்லை என ஒரு குறத்திப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். ஆனால், காவல் அதிகாரிகளோ அவரை அலட்சியமாக நடத்துகின்றனர். கோபத்திலும், மகளை மீட்க வேண்டும் என்கிற மனநிலையிலும் அவர் என்னென்ன செய்கிறார் என்பதும் காட்டப்பட்டுள்ளது.

வைஷ்ணவ் மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில் கௌசிக் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். போலீஸ் அதிகாரியாக பிரேம் குமார் நடித்துள்ளார். ஒரு கொடியவனை என் கவுண்டர் செய்யும் காட்சியில் அவரது ஓப்பனிங் மங்காத்தா படத்தில் அஜித்தின் ஓப்பனிங்குக்கு இணையானது. போலீஸ் அதிகாரியாக மிடுக்காக செயல்படுவது, காதல் வசப்படும் போது குழைவது, செய்த தவறுக்கு மனம் வருந்துவது, அவர் லஞ்சம் பெற்றதை சொல்லிக் காட்டும் போது குற்ற உணர்ச்சியில் தலை குனிவது, குறத்திப்பெண் அவரை மிரட்டும் தொனியில் பேசும் போதும், எச்சரிக்கும் போதும் முகத்தில் பயத்தை காட்டுவது, மனம் திருந்தி ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக அதிரடியாக செயல்படுவது என நடிப்பில் மிளிர்கிறார் பிரேம்குமார்.

அதிர வைக்கும் ‘அலாரம்’ – மிஸ் பண்ணாம பாருங்க

அலாரம் தொடரின் ஓவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்பாக செல்கிறது. தன்னுடைய மகளை தொலைத்து விட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போது அலட்சியமாக பேசும் காவல் அதிகாரியை முறைக்கும் தொடக்க காட்சியிலேயே சுபத்ராவின் நடிப்பு அபாரம். உருட்டும் கண்களில் கோபத்தை காட்டி பயமுறுத்துகிறார். இன்ஸ்பெக்டராக வரும் பிரேம்குமாரிடம் சாமி.. சாமி என அவர் பேசும் வசன உச்சரிப்புகள், அவர் கெஞ்சுகிறாரா? இல்லை மிரட்டுகிறா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி நமக்குள் நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஹீரோவுக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்து, ஒவ்வொரு சில மணிநேரங்களுக்கு இடையிலும் அவரை தொலைப்பேசியில் மிரட்டும் போதும் ஹீரோவுக்கு வரும் பயம் நம்மையே தொற்றிக்கொள்கிறது. ஒரு கட்டத்தில் காவல் அதிகாரிகளின் மீது நம்பிக்கை இழந்து பில்லி  சூனியம் என அவர் செயல்படுவது நமக்கு பீதியை ஏற்படுத்துகிறது.

அதிர வைக்கும் ‘அலாரம்’ – மிஸ் பண்ணாம பாருங்க

கடத்தப்படும் பெண்கள் எப்படி அடைத்து வைக்கப்படுகிறார்கள், அவர்களை அடித்து உதைத்தே எப்படி பாலியல் தொழிலுக்கு சம்மதிக்க வைக்கிறார்கள், அவர்கள் தப்பி சென்றுவிடாமல் எப்படி பாதுகாக்கிறார்கள், அப்படி தப்பி சென்றால் அவர்கள் எதுமாதிரியான தண்டனை அளிக்கப்படுகிறது, அப்பாவி பெண்களை எப்படி நாசம் செய்கிறார்கள் என நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகள் அலாரம் தொடரில் தைரியமாகவும், நேர்மையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறத்தி மகள் செல்லியாக நடித்திருக்கும் சிறுமி நடிப்பில் அபாரம். ஒன்றும் அறியாத, உலகம் தெரியாத, விளையாட்டு சிறுமியாக விளையாடும் போதும், கடத்தப்பட்டதை உணர்ந்து அஞ்சும் போதும் அருமையாக நடித்துள்ளார்.  கடத்தப்படும் பெண்களை ஆடு, மாடுகள் போல் இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் காட்சியும், என்னை அடிக்காதீங்க அண்ணா.. நான் எத்தன பேர்கூடனாலும் படுக்குறேன்.. என்னால் அடி தாங்க முடியாது என பிரேமிடம் இளம்பெண் அழுது கெஞ்சும் காட்சிகள் மனதை உறைய வைக்கிறது.

அதிர வைக்கும் ‘அலாரம்’ – மிஸ் பண்ணாம பாருங்க

ஹீரோவுடன் பணிபுரியும் அவரது தோழியாக வரும் பெண்ணும் நடிப்பில் அசத்தியுள்ளார். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக, ஹீரோவுக்கு அறிவுரை கூறி மனதில் நிறைகிறார். ஹீரோவுக்கு பக்க பலமாக வெள்ளை சட்டை மற்றும் காக்கி சட்டையில் மிடுக்கான போலீஸ் அதிகாரிகளாக வருபவர்கள் நடிப்பில் அசத்தியுள்ளனர்.

புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் சில அதிகாரிகள் எப்படி நடந்து கொள்வார்கள்? பதட்டத்துடனும், நம்பிக்கையுடனும் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் சில அதிகாரிகள் எவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்வார்கள் என்பவை அலாரத்தில் அருமையாக காட்சி படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், ஒரு குற்றத்தை போலீஸ் அதிகாரிகள் எப்படி கையாள்வார்கள்? எப்படி அணுகுவார்கள்? எப்படி விசாரணை செய்வார்கள்? சாட்சிகளிடம் எப்படி விசாரிப்பார்கள்? உண்மையை கூறாமல் அடம் பிடிப்பவர்களிடம் எப்படி உண்மையை வரவழைப்பார்கள்? என அனைத்தும் அலாரம் தொடரில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

அதிர வைக்கும் ‘அலாரம்’ – மிஸ் பண்ணாம பாருங்க

மேலும், இரு கும்பலுக்கு இடையே உள்ள தொழில் போட்டியை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்தி, திறமையாக காய்களை நகர்த்தி கடைசியில் அவர்களை அழிக்கிறார் என்பதும் அலாரம் தொடரில் காட்டப்பட்டுள்ளது.

சென்னையின் இருண்ட முகத்தை ஒளிப்பதிவாளர் வின்செண்ட் நுணுக்கமாக படம்பிடித்துள்ளார். முதல் காட்சியில் ரவுடிகளை ஹீரோ கடற்கரையில் துரத்தும் போது கடலுக்குள், படகில் இருந்து படம் பிடித்து மிரட்டியுள்ளார். செஞ்சுலக்‌ஷிமியின் பின்னணி இசை மிரட்டலாக உள்ளது. டைட்டில் கார்டிலேயே கதையின் அடிநாதத்தை அவரின் இசை நமக்கு உணர்த்தி விடுகிறது. கலை இயக்குனர் இளங்கோவின் கைவண்ணத்தில் காவல் நிலையம், பெண்கள் அடைத்து வைக்கப்படும் வீடுகள் என நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ரமேஷ் பாரதியின் எடிட்டிங் ஆலாரம் தொடருக்கு பக்க பலமாக இருக்கிறது. அவரின் எடிட்டிங்கில் ஆக்‌ஷன் காட்சிகள் விறு விறுவென நமக்குள் கடத்தப்படுகிறது.

மொத்தத்தில், ஒரு இணைய தொடர் போல் இல்லாமல் ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை தருகிற அளவுக்கு அலாரம் தொடரை கௌசிக் அருமையாக இயக்கியுள்ளார்.

ஜீ5 இணையத்தில் அலாரம் தொடரை கண்டுகளியுங்கள். ரூ.49 மட்டுமே செலுத்தி ஒரு மாதம் முழுவதும் பல தமிழ் இணைய தொடர்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம்  https://www.zee5.com/

அலாரம் தொடரின் டிரைய்லரை பார்க்க கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News