×

சூது கவ்வும் இயக்குனருக்கு விரைவில் திருமணம்

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட ‘சூது கவ்வும்’ படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு, ஒருசில படங்களுக்கு கதை, திரைக்கதை வசனம் மட்டுமே எழுதி வந்தார். இந்நிலையில், நலன் குமாரசாமி தனது உறவுக்கார பெண்ணான சரண்யா என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் சம்மதத்துடன் நடக்கவிருக்கும்
 
சூது கவ்வும் இயக்குனருக்கு விரைவில் திருமணம்

சூது கவ்வும் இயக்குனருக்கு விரைவில் திருமணம்

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட ‘சூது கவ்வும்’ படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு, ஒருசில படங்களுக்கு கதை, திரைக்கதை வசனம் மட்டுமே எழுதி வந்தார்.

இந்நிலையில், நலன் குமாரசாமி தனது உறவுக்கார பெண்ணான சரண்யா என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் சம்மதத்துடன் நடக்கவிருக்கும் இவர்களது திருமணம் வருகிற நவம் 9-ந் தேதி நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்று முடிந்துள்ளது.

திருமணத்திற்காக நலன் குமாரசாமி தனது உடல் எடையை 100 கிலோவில் இருந்து 50 கிலோவுக்கு குறைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News