×

ஜீரோ மதிப்பெண் பெற்ற மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுந்தர் பிச்சை

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் பி.எச்.டி படித்து வருபவர் சரபினா நான்ஸ். இவர் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ 4 வருடங்களுக்கு முன்பு அணு இயற்பியல் பாடத்தில் நான் பூஜ்யம் மதிப்பெண் வாங்கினேன். இதனால் பயந்து போன நான் எனது பேராசிரியரை சந்தித்து எனது பாடத்தை மாற்றினேன். தற்போது வான் இயற்பியல் பாடத்தில் பி.எச்.டி பெற்று 2 புத்தகங்களையும் எழுதியுள்ளேன். நமது திறமையை கிரேட் தீர்மானிக்காது என பதிவிட்டிருந்தார். இதைக்கண்ட கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை ’சரியான
 
ஜீரோ மதிப்பெண் பெற்ற மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுந்தர் பிச்சை

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் பி.எச்.டி படித்து வருபவர் சரபினா நான்ஸ். இவர் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ 4 வருடங்களுக்கு முன்பு அணு இயற்பியல் பாடத்தில் நான் பூஜ்யம் மதிப்பெண் வாங்கினேன். இதனால் பயந்து போன நான் எனது பேராசிரியரை சந்தித்து எனது பாடத்தை மாற்றினேன். தற்போது வான் இயற்பியல் பாடத்தில் பி.எச்.டி பெற்று 2 புத்தகங்களையும் எழுதியுள்ளேன். நமது திறமையை கிரேட் தீர்மானிக்காது என பதிவிட்டிருந்தார்.

இதைக்கண்ட கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை ’சரியான சொன்னீர்கள்.. உங்கள் கருத்து ஈர்ப்புடன் உள்ளது’ என பதிவிட்டிருந்தார். தனது டிவிட்டை சுந்தர் பிச்சை பாராட்டியது சரபினாவுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அவரின் டிவிட்டை இதுவரை 81.8 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 15 ஆயிரம் பேர் ரீடிவிட் செய்துள்ளனர். மேலும், பல பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் தங்களின் கருத்து அவருடன் பகிர்ந்து வருகின்றனர்.

சர்பினா நான்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விண்வெளி, பெண்களின் ஆரோக்கியம், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல விசயங்கள் பற்றி எழுதி வருகிறார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News