×

தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் நிர்வாகிகள் புகைப்படம் – துப்பறிந்த விஷால்

புதிய தமிழ் சினிமாக்களை இணையத்தில் வெளியிடும் நபர்களின் புகைப்படங்களை நடிகர் விஷால் தரப்பு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவிற்கு பெரிய தலைவலியாக இருந்த தமிழ்ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இணையதளங்களின் நிர்வாகிகளின் புகைப்படம் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. புதுபடங்கள் திரையரங்குகளில் வெளியாகும் அன்றே, இணையத்திலும் அவர்கள் வெளியிட்டு வந்தனர். யாரேனும் அதை கடுமையாக விமர்சித்தால், உங்கள் படங்களை வெளியிடுவோம் என சவால் விட்டு அவர்கள் படங்களை வெளியிட்டு வந்தனர். திரையரங்கிற்கு செல்ல விரும்பாத பலர்
 
தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் நிர்வாகிகள் புகைப்படம் – துப்பறிந்த விஷால்

தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் நிர்வாகிகள் புகைப்படம் – துப்பறிந்த விஷால்புதிய தமிழ் சினிமாக்களை இணையத்தில் வெளியிடும் நபர்களின் புகைப்படங்களை நடிகர் விஷால் தரப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவிற்கு பெரிய தலைவலியாக இருந்த தமிழ்ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இணையதளங்களின் நிர்வாகிகளின் புகைப்படம் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

புதுபடங்கள் திரையரங்குகளில் வெளியாகும் அன்றே, இணையத்திலும் அவர்கள் வெளியிட்டு வந்தனர். யாரேனும் அதை கடுமையாக விமர்சித்தால், உங்கள் படங்களை வெளியிடுவோம் என சவால் விட்டு அவர்கள் படங்களை வெளியிட்டு வந்தனர்.

திரையரங்கிற்கு செல்ல விரும்பாத பலர் இந்த இணையதளங்களுக்கு சென்று புதிய படங்களை பார்த்தும், டவுன்லோட் செய்தும் வந்தனர்.

இந்நிலையில், இவர்களை துப்பறியும் வேலையை, சங்க தயாரிப்பாளரான விஷால் ஒரு குழுவிடம் ஒப்படைத்தார். அவர்கள் மூலம் சமீபத்தில் ஒரு நபரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில்,  இங்கிலாந்தில் உள்ள தமிழ்ராக்கர்ஸ் அட்மின் டிக்ஸன் ராஜ் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ்ராக்கர்ஸ் இணையத்தின் அட்மின் அர்விந்த் லோகேஸ்வரன் ஆகியோரின் புகைப்படங்களை சினிமா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. மேலும், அவர்களை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானமும் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

 

 

 

From around the web

Trending Videos

Tamilnadu News