×

டார்கெட் செய்யப்படும் சிவகார்த்திகேயன் – ஹீரோ படத்தை வெளியிட தடை

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தற்போது சிறிய, வளர்ந்து வரும் நடிகர்களின் திரைப்படங்கள், சில சமயம் தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களும் பணப்பிரச்சனை காரணமாக கூறிய தேதிகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ சங்கத்தமிழன்’ ஆகிய திரைப்படங்கள் தொடர் சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதேபோல், சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படமும் சிக்கலை
 
டார்கெட் செய்யப்படும் சிவகார்த்திகேயன் – ஹீரோ படத்தை வெளியிட தடை

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தற்போது சிறிய, வளர்ந்து வரும் நடிகர்களின் திரைப்படங்கள், சில சமயம் தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களும் பணப்பிரச்சனை காரணமாக கூறிய தேதிகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ சங்கத்தமிழன்’ ஆகிய திரைப்படங்கள் தொடர் சிக்கல்களை சந்தித்து வருகிறது.

அதேபோல், சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படமும் சிக்கலை சந்தித்துள்ளது. இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையான டிசம்பர் 25ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தயாரிப்பு பங்குதாரர்கள் வாங்கிய ரூ.10 கோடி கடனை திருப்பி கொடுக்கததால் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் ஹீரோ படத்திற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் தொடர்ந்து டார்கெட் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News