×

தினசரி பத்து லட்சம்: பேரம் பேசுகிறாரா ஓவியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்ட ஓவியா, மீண்டும் திரும்பி வந்தால் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என்பது கடந்த வார டிஆர்பி நிரூபித்துள்ளது. ஓவியாவுக்கு மாற்றாக இருப்பார் என்று களமிறக்கப்பட்ட பிந்துமாதவி, பெரிதாக சோபிக்காதால் நிகழ்ச்சியின் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நல்ல வேளையாக சனி, ஞாயிறு மட்டும் கமல்ஹாசன் காப்பாற்றுகிறார் இந்த நிலையில் ஓவியாவை மீண்டும் களமிறக்க அவரிடம் சேனல் நிர்வாகம் ஓவியாவிடம் பேரம் பேசி வருகிறதாம். இதுவரை தினமும் ரூ.2
 
தினசரி பத்து லட்சம்: பேரம் பேசுகிறாரா ஓவியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்ட ஓவியா, மீண்டும் திரும்பி வந்தால் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என்பது கடந்த வார டிஆர்பி நிரூபித்துள்ளது. ஓவியாவுக்கு மாற்றாக இருப்பார் என்று களமிறக்கப்பட்ட பிந்துமாதவி, பெரிதாக சோபிக்காதால் நிகழ்ச்சியின் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நல்ல வேளையாக சனி, ஞாயிறு மட்டும் கமல்ஹாசன் காப்பாற்றுகிறார்

இந்த நிலையில் ஓவியாவை மீண்டும் களமிறக்க அவரிடம் சேனல் நிர்வாகம் ஓவியாவிடம் பேரம் பேசி வருகிறதாம். இதுவரை தினமும் ரூ.2 லட்சம் சம்பளம் வாங்கி வந்த ஓவியா மீண்டும் உள்ளே சென்றால் தினம் ரூ.5 லட்சம் சம்பளம் தர தயாராக இருக்கின்றதாம். இருப்பினும் ஓவியாவிடம் இருந்து பாசிட்டிவ் பதில் வராததால் ரூ.10 லட்சம் என்ற பேரமும் பேசப்பட்டு வருவதாக வதந்திகள் கூறுகின்றன.

ஆனால் ஓவியாவின் தந்தை கறாராக பணத்தை விட தனது மகளின் மனநிம்மதியே பெரிது என்ற முடிவை எடுத்துள்ளாராம். அதுமட்டுமின்றி காயத்ரி, சக்தி, ஆரவ் மூவரும் வெளியேறினால் ஓவியா உள்ளே நுழைய தயார் என்ற கண்டிஷனும் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News