×

நன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்

போடா போடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் விக்னேஷ் சிவன். சிம்பு நடித்த இந்த படம் படுதோல்வி அடைந்தது, இதையடுத்து தனுஷ் நடித்த விஐபி படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். பின் நட்பின் காரணமாக தனுஷ் அவருக்கு நானும் ரௌடிதான் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். விஜய் சேதுபதி , நயன்தாரா நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் திட்டமிடாத படபிடிப்பு காரணமாக படத்தின் பட்ஜெட் அதிகமானதால் தனுஷிற்கு படம் நஷ்டத்தை
 
நன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்

போடா போடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் விக்னேஷ் சிவன். சிம்பு நடித்த இந்த படம் படுதோல்வி அடைந்தது, இதையடுத்து தனுஷ் நடித்த விஐபி படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். பின் நட்பின் காரணமாக தனுஷ் அவருக்கு நானும் ரௌடிதான் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். விஜய் சேதுபதி , நயன்தாரா நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் திட்டமிடாத படபிடிப்பு காரணமாக படத்தின் பட்ஜெட் அதிகமானதால் தனுஷிற்கு படம் நஷ்டத்தை யே ஏற்படுத்தியது என்றும் சொல்லப்பட்டது. மேலும் நயன்தாரா ,மீதான காதலும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் நானும் ரௌடிதான் படம் வெளியாகி 4 ஆண்டுகள் கடந்த நிலையில் டுவிட்டரில் விக்னேஷ் சிவன் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் படத்தில் பங்குபெற்ற விஜய் சேதுபதி, நயன்தாரா,ஆர்.ஜே.பாலாஜி மற்றும் படத்தை வாங்கி வெளியிட்ட லைகா நிறுவனம் வரை அனைவருக்கும் டேக் செய்து நன்றி கூறியுள்ளார். ஆனால் படத்தை தயாரித்த தனுஷ் பெயரை டேக் செய்யாமல் சாதரணமாக குறிப்பிட்டுள்ளார். தனுஷ் சமூக வலைதளமான டுவிட்டரில் ஆக்டிவாக செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்

தோல்வி படம் கொடுத்த அவரை நம்பி பணம் முதலீடு செய்த தனுஷை மறந்த விக்னேஷ் சிவன் என்று ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News