×

எனை நோக்கி பாயும் தோட்டா 3 நாள் வசூல் – தயாரிப்பாளர் அதிர்ச்சி

தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வசூல் அப்படத்தை வெளியிட்ட பிரபல கல்வி தந்தை மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன்பே கௌதம் மேனன் முடித்து விட்டார். ஆனால், பணப்பிரச்சனைகளால் இப்படம் வெளியாகவில்லை. எனவே, பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கௌதம் மேனனுக்கு உதவ முன் வந்தார். ரூ.25 கோடி பணத்தை கொடுத்து இப்படத்தை
 
எனை நோக்கி பாயும் தோட்டா 3 நாள் வசூல் – தயாரிப்பாளர் அதிர்ச்சி

தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வசூல் அப்படத்தை வெளியிட்ட பிரபல கல்வி தந்தை மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன்பே கௌதம் மேனன் முடித்து விட்டார். ஆனால், பணப்பிரச்சனைகளால் இப்படம் வெளியாகவில்லை. எனவே, பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கௌதம் மேனனுக்கு உதவ முன் வந்தார். ரூ.25 கோடி பணத்தை கொடுத்து இப்படத்தை அவர் வெளியிட்டார்.

எனை நோக்கி பாயும் தோட்டா 3 நாள் வசூல் – தயாரிப்பாளர் அதிர்ச்சி

ஆனால், இப்படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. எனவே, சமூகவலைத்தளங்களில் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தது. படம் வெளியாகி 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இப்படம் சென்னையில் ரூ.2.02 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது கௌதம் மேனன் மற்றும் தயாரிப்பாளரின் கடனை ஏற்று படத்தை வெளியிட்ட ஐசரி கணேஷன் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வெளியிட ஐசரி கணேசனின் வேல்ஸ் நிறுவனத்திற்கு கௌதம் மேனன் மூன்று திரைப்படங்களை இயக்கித் தரவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News