×

வாலிபர் மரணம்: தொலைக்காட்சி தரப்பு மறுப்பு

தமிழக மக்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் முக்கிய பிரச்சனையாக போய்க்கொண்டிருக்கிறது. பிக்பாஸ் சம்பந்தப்பட்ட எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அது ரசிகா்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூட்டிங் பணிக்காக வந்த மும்பை வாலிபா் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டின் அனைத்து பணிகளுக்காகவும் நிறைய போ் இரவு பகல் பாராமல் கண் விழித்து அயராது உழைத்து வருகின்றனா். அந்த நிகழ்ச்சியின் எடிட்டிங் வேலையாக இருந்தாலும், வீட்டிற்கு
 
வாலிபர் மரணம்:  தொலைக்காட்சி தரப்பு மறுப்பு

தமிழக மக்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் முக்கிய பிரச்சனையாக போய்க்கொண்டிருக்கிறது. பிக்பாஸ் சம்பந்தப்பட்ட எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அது ரசிகா்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூட்டிங் பணிக்காக வந்த மும்பை வாலிபா் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டின் அனைத்து பணிகளுக்காகவும் நிறைய போ் இரவு பகல் பாராமல் கண் விழித்து அயராது உழைத்து வருகின்றனா். அந்த நிகழ்ச்சியின் எடிட்டிங் வேலையாக இருந்தாலும், வீட்டிற்கு தேவையான குழாய் அமைத்தல், மேலும் எல்லாவிதமான பணிகளுக்காக பல ஊழியா்கள் வேலை 24 மணி நேரமும் பணி புரிந்து வருகின்றனா்.

பிக்பாஸ் வீடு பூந்தமல்லி அருகில் உள்ள நசரேத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டில் தான் செட் போடப்பட்டுள்ளது. இந்த வீட்டில் பிளம்பிங் வேலைக்காக குழாய் பதிக்க வந்த மும்பை சோ்ந்தவா் இப்ராஹிம் ஷேக் என்பவா் தவறி விழுந்ததில் திடீரென இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அருகில் உள்ள ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்ற அவா் இறந்து விட்டார். அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்ட காரணத்தால் அவா் உயிரிழந்ததாக தக வல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள். விசாரணைக்குப் பிறகு தான் இந்த இறப்புக்கான காரணம் தொியவரும் என்றனா்.

இந்த சம்பவம் குறித்து விஜய் டீவி தரப்பில், இறந்த வாலிபர் பிக்பாஸ் நிகழ்ச்சி பணிக்காக வரவில்லை என்றும், பிக்பாஸ் வீட்டின் அருகிலு உள்ள மற்றொரு வீட்டின் பணிக்காக வந்தவர் என்று விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News