×

அடுத்த விக்ரம் துருவ்! மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..

நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள ‘ஆதித்யா வர்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கில் 2017-யில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை ‘வர்மா’ என்கிற தலைப்பில் இயக்குனர் பாலா இயக்கினார். விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அது தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனக்கூறிய தயாரிப்பாளர் தரப்பு அர்ஜூன் ரெட்டி படத்தின் பணிபுரிந்த கிரிசாயாவை இயக்குனராக நியமித்து ‘ஆதித்ய வர்மா’ என்கிற தலைப்பில் படத்தை
 
அடுத்த விக்ரம் துருவ்! மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..

நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள ‘ஆதித்யா வர்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

தெலுங்கில் 2017-யில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை ‘வர்மா’ என்கிற தலைப்பில் இயக்குனர் பாலா இயக்கினார். விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அது தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனக்கூறிய தயாரிப்பாளர் தரப்பு அர்ஜூன் ரெட்டி படத்தின் பணிபுரிந்த கிரிசாயாவை இயக்குனராக நியமித்து ‘ஆதித்ய வர்மா’ என்கிற தலைப்பில் படத்தை மீண்டும் எடுத்தது.

இப்படத்தில் துருவுக்கு ஜோடியாக பனிதா சந்தூ நடித்துள்ளார். மேலும், இன்னொரு ஹீரோயினாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News