×

பாம்பை கடித்துக் கொன்ற முதியவர் – இறுதியில் நேர்ந்த சோகம்

Man dead in snake bite – கோபத்தில் தன்னை கடித்த பாம்பை திருப்பிக்கடித்து கொன்ற முதியவர் மரணமடைந்துள்ளார். குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா எனும் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் சிலர் வயலில் இருந்து மக்காசோளத்தை லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு பாம்பு இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடினர். ஆனால், 70 வயதான முதியவர் பாரியா மட்டும் நான் பல பாம்புகளை பிடித்துள்ளேன்
 
பாம்பை கடித்துக் கொன்ற முதியவர் – இறுதியில் நேர்ந்த சோகம்

Man dead in snake bite – கோபத்தில் தன்னை கடித்த பாம்பை திருப்பிக்கடித்து கொன்ற முதியவர் மரணமடைந்துள்ளார்.

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா எனும் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் சிலர் வயலில் இருந்து மக்காசோளத்தை லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு பாம்பு இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடினர்.

ஆனால், 70 வயதான முதியவர் பாரியா மட்டும் நான் பல பாம்புகளை பிடித்துள்ளேன் எனக்கூறி பயப்படாமல் அந்த பாம்பை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பாம்பு அவரின் கை மற்றும் முகத்தில் கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த பாரியா பாம்பை பிடித்து கடித்து குதறி தூக்கி எறிந்தார். இதில் பாம்பு இறந்து விட்டது.

ஆனால், பாம்பு கடித்ததில் பாரியா மயக்கமடைந்தார். எனவே, அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், விஷம் ஏறிவிட்டதால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துவிட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News