×

‘சர்கார்’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது! (விடியோ உள்ளே)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘சர்கார்’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், படத்தில் வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் விஜய், ஏ.ஆர் ரஹ்மான் 4-வது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர். இந்த படத்தின் வௌயீட்டு விழா அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ‘சன் பிக்சர்ஸ் நிறுவனம்’ ‘சிம்டாங்காரன்’ என்ற சிங்கிள் ட்ராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவித்து இருந்தது. இதற்கிடையில்
 
‘சர்கார்’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது! (விடியோ உள்ளே)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம்
‘சர்கார்’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.
மேலும், படத்தில் வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, யோகி
பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் விஜய், ஏ.ஆர் ரஹ்மான் 4-வது முறையாக
கூட்டணி அமைத்துள்ளனர். இந்த படத்தின் வௌயீட்டு விழா
அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், ‘சன் பிக்சர்ஸ் நிறுவனம்’ ‘சிம்டாங்காரன்’
என்ற சிங்கிள் ட்ராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என
தெரிவித்து இருந்தது. இதற்கிடையில் ‘ சிம்டாங்காரன்’ என்ற
வார்த்தைக்கு ‘ கவர்ந்து இழுப்பவன்’, ‘பயமற்றவன்’,
‘துடுக்கானவன்’ இவைகள்தாம் அர்த்தம் என்று பாடலாசிரியர்
விவேக் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

தற்போது, சன் நெக்ஸ்ட் ஆப்பில் இப்படத்தின் ‘ சிம்டாங்காரன்’
பாடல் வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப்
பகிரப்பட்டு வருகிறது. இப்பாடல் ரசிகர்களிடையே மிகுந்த
உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News