×

சூப்பர் டீலக்ஸ் படம் வேற லெவல் – பாராட்டித் தள்ளிய இயக்குனர்

Anurag Kashyap : சூப்பர் டீலக்ஸ் படத்தை தான் பார்த்து விட்டதாகவும், படம் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார். ஆரண்ய காண்டம் படம் மூலம் கவனத்தை ஈர்த்த தியாகராஜா குமாரராஜா இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின், மலையாள நடிகர் பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம்
 
சூப்பர் டீலக்ஸ் படம் வேற லெவல் – பாராட்டித் தள்ளிய இயக்குனர்

Anurag Kashyap : சூப்பர் டீலக்ஸ் படத்தை தான் பார்த்து விட்டதாகவும், படம் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.

ஆரண்ய காண்டம் படம் மூலம் கவனத்தை ஈர்த்த தியாகராஜா குமாரராஜா இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின், மலையாள நடிகர் பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் வருகிற 29ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் டீலக்ஸ் படம் வேற லெவல் – பாராட்டித் தள்ளிய இயக்குனர்

இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்த படத்தை பார்த்த பின், இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். குமாராஜா பயமில்லாத ஒரு இயக்குனர். இப்படத்தில் நிறைய யுத்திகளை அவர் கையாண்டுள்ளார். இப்படத்தை பற்றி மேலும் கூற எனக்கு சுதந்திரம் இல்லை படம் பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News