×

நோட்டா எப்படி உள்ளது

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பின் வந்திருக்கும் ஒரு முழுமையான அரசியல் படமாக இது வந்திருக்கிறது. நேற்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் தேவரகொண்டா ஒரு சிறந்த நடிகர் என்பதை அவர் பேசும் தமிழ் மூலம் அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே பத்து பதினைந்து தமிழ் படங்களில் நடித்த அனுபவ நடிகர் போல நடித்துள்ளார். மற்ற தமிழ் சினிமா ஹீரோக்களுக்கெல்லாம் முதல் படத்திலேயே டஃப் கொடுத்திருக்கிறார் விஜய் என்றால் மிகையாகாது. சில அரசியல் சூழ்நிலைகளால்
 
நோட்டா எப்படி உள்ளது

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பின் வந்திருக்கும் ஒரு முழுமையான அரசியல் படமாக இது வந்திருக்கிறது. நேற்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் தேவரகொண்டா ஒரு சிறந்த நடிகர் என்பதை அவர் பேசும் தமிழ் மூலம் அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே பத்து பதினைந்து தமிழ் படங்களில் நடித்த அனுபவ நடிகர் போல நடித்துள்ளார்.

மற்ற தமிழ் சினிமா ஹீரோக்களுக்கெல்லாம் முதல் படத்திலேயே டஃப் கொடுத்திருக்கிறார் விஜய் என்றால் மிகையாகாது.

சில அரசியல் சூழ்நிலைகளால் நெருக்கடிக்கு உள்ளாகி தன் மகன் விஜய் தேவரகொண்டாவை முதல்வராக்கும் நாசரும் அதன் பின் விஜய் எடுக்கும் அதிரடிகளும் படம் பட்டாசு என்பதை உணர வைத்து ரசிகர்களை அனுப்பி வைக்கிறது.

ஏற்கனவே அமைதிப்படை, மகா நடிகன் போன்ற படங்களில் அரசியலில் வெளுத்து வாங்கிய சத்யராஜ் இதில் விஜய்க்கு ஆலோசனை சொல்லும் பத்திரிக்கையாளர் வேடம். முதல் படமாக இருந்தாலும் மிக தரமான படமாக வந்துள்ளது நோட்டா.

இயக்குனர் ஆனந்த் சங்கர் சிறப்பான முறையில் படத்தை இயக்கியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News