×

இது வேண்டாம் ரஜினி.. நடப்பதே வேறு…எச்சரித்த கமல்ஹாசன்…

பல வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு ரஜினி விலக நினைத்தது தெரியவந்துள்ளது. நடிகர் மற்றும் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் துவங்கியுள்ளார். இதில், ரஜினி உட்பட பல திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த அலுவலகத்தின் முன்பு இயக்குனர் மற்றும் தனது திரையுலக குருவான பாலச்சந்திரின் உருவ சிலையை ரஜினி மற்றும் கமல்ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர். அதன்பின், அந்த விழாவில் ரஜினியும், கமலும் பல
 
இது வேண்டாம் ரஜினி.. நடப்பதே வேறு…எச்சரித்த கமல்ஹாசன்…

பல வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு ரஜினி விலக நினைத்தது தெரியவந்துள்ளது.

நடிகர் மற்றும் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் துவங்கியுள்ளார். இதில், ரஜினி உட்பட பல திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த அலுவலகத்தின் முன்பு இயக்குனர் மற்றும் தனது திரையுலக குருவான பாலச்சந்திரின் உருவ சிலையை ரஜினி மற்றும் கமல்ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர். அதன்பின், அந்த விழாவில் ரஜினியும், கமலும் பல விஷயங்களை மனம் விட்டு பேசினர்.

இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன் ‘ரஜினியும், நானும் ஒருவருக்கு ஒருவர் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தோம். எங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் எங்கள் இருவருக்கும் நாங்கள் தான் முதல் ரசிகன். நானும், ரஜினியும் ஒருவரை ஒருவர் விமர்சிப்போம், பாராட்டிக் கொள்வோம். நானும் ரஜினியும் யார் என்பதில் நாங்கள் இருவருமே தெளிவாக இருக்கிறோம்.

எங்கள் ரசிகர்களுக்கு இடையே சண்டை நடந்து கொண்டிருக்கும், ஆனால் நாங்கள் இருவரும் மிக மிக நெருக்கமானவர்கள். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டுவிட்டு செல்லப்போவதாக ரஜினி கூறிய போது அதிர்ந்து போய்விட்டேன். சினிமாவை விட்டு போனால் நடப்பதே வேறு என்று நான் ரஜினியிடம் கூறினேன். ரஜினி சினிமாவை விட்டு சென்று இருந்தால் என்னையும் சினிமாவில் இருந்து அனுப்பிவிடுவார்கள். ரஜினி சினிமாவிற்கு வந்த முதல் வருடத்திலேயே ஐகான் ஆகிவிட்டார். மத்திய அரசின் விருதை பெறும் ரஜினிக்கு வாழ்த்து, விருது கொடுப்பவர்களுக்கு நன்றி ’ என கமல் பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News