×

இவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ

Actor Saravanan – பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசனை ஒருமையில் விமர்சித்ததால்தான் சரவணன் வெளியேற்றப்பட்டார் என்கிற புதிய செய்தியும், ஆதாரமும் வெளியாகியுள்ளது. நேற்று இரவு திடீரென நடிகர் சரவணனை பிக்பாஸ் வீட்டிலிருந்து பிக்பாஸ் வெளியேற்றினார். கல்லூரியில் படிக்கும் போது பேருந்தில் பெண்களை உரசியிருக்கிறேன் எனக்கூறி சர்ச்சையில் சிக்கியது, சேரனை ஒருமையில் விமர்சித்தது ஆகியவைதான் காரணம் என செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது மேலும் சில முக்கிய காரணங்களும் தெரியவந்துள்ளது. சேரனை சரவணன் தரக்குறைவாக பேசியதற்கு இயக்குனர் சங்கம் கடும்
 
இவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ

Actor Saravanan – பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசனை ஒருமையில் விமர்சித்ததால்தான் சரவணன் வெளியேற்றப்பட்டார் என்கிற புதிய செய்தியும், ஆதாரமும் வெளியாகியுள்ளது.

நேற்று இரவு திடீரென நடிகர் சரவணனை பிக்பாஸ் வீட்டிலிருந்து பிக்பாஸ் வெளியேற்றினார். கல்லூரியில் படிக்கும் போது பேருந்தில் பெண்களை உரசியிருக்கிறேன் எனக்கூறி சர்ச்சையில் சிக்கியது, சேரனை ஒருமையில் விமர்சித்தது ஆகியவைதான் காரணம் என செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது மேலும் சில முக்கிய காரணங்களும் தெரியவந்துள்ளது.

சேரனை சரவணன் தரக்குறைவாக பேசியதற்கு இயக்குனர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சரவணனை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றுங்கள் என விஜய் தொலைக்காட்சிக்கு கடும் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. சரவணனை வெளியேற்றவில்லை எனில் பிக்பாஸ் வீட்டை முற்றுகையிடுவோம் என ஒரு தயாரிப்பாளர் நேற்று அறிக்கையும் விட்டிருந்தார்.

இது ஒருபுறம் எனில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் லாஸ்லியாவிடம் பேச தொடங்கும் போது சரவணன் மெல்லிய குரலில் ‘இவன் கோத்துவிடுகிறான்’ என பேசுவது அவரது மைக்கில் பதிவாகியுள்ளது. எனவே, இதற்கு மேலும் அவரை அங்கே வைத்திருக்கக் கூடாது எனக்கருதியே பிக்பாஸ் நேற்று இரவோடு இரவாக அவரை வெளியேற்றிவிட்டார் என தகவல் கசிந்துள்ளது. சரவணன் அப்படி பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News