×

ராஜமவுலி இயக்கும் புதிய படத்தின் கதை இதுதான்….

பாகுபலி படத்துக்கு பின் இயக்குனர் ராஜமவுலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ஜூனியர் என்.டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று ஆந்திராவில் நடந்தது. இதில், ராஜமவுலி உட்பட பலரும் கலந்து கொண்டனர். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை டெய்சி எட்ஜர் ஜோன்ஸ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இவர், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். அதேபோல், பாலிவுட் நடிகை ஆலியாபட் இப்படத்தில்
 
ராஜமவுலி இயக்கும் புதிய படத்தின் கதை இதுதான்….

பாகுபலி படத்துக்கு பின் இயக்குனர் ராஜமவுலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ஜூனியர் என்.டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று ஆந்திராவில் நடந்தது. இதில், ராஜமவுலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை டெய்சி எட்ஜர் ஜோன்ஸ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இவர், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். அதேபோல், பாலிவுட் நடிகை ஆலியாபட் இப்படத்தில் நடிக்கவுள்ளார். அநேகமாக அவர் ராம்சரனுக்கு ஜோடியாக நடிப்பார் எனத்தெரிகிறது.

ராஜமவுலி இயக்கும் புதிய படத்தின் கதை இதுதான்….

இப்படம் அடுத்த வருடம் ஜூலை 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

அதேபோல், இப்படத்தின் கதை கருவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1920ம் ஆண்டுகளில் ஆந்திராவில் வெள்ளையர்களுக்கு எதிராக செயல்பட்ட சீதாராமராஜூ மற்றும் கொமாரம் பீம் என்ற இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய கதை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News