×

வாலிப கவிஞர் வாலி நினைவு தினம் இன்று

கவிஞர் வாலி மறைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. கடந்த 2013ம் ஆண்டு இதே நாளில் வாலி அவர்கள் மறைந்தார்கள். தமிழ் சினிமாவில் இன்றும் நாம் மிக தீவிர விருப்பமாக கேட்டு ரசித்துகொண்டிருக்கும் பல அற்புத பாடல்களை இயற்றியவர் வாலி அவர்கள். வாலி அவர்கள் பாடலாசிரியர் மட்டுமல்லாது பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரை, பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு சிறந்த இலக்கிய ஆளுமையும் ஆவார் இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதை
 
வாலிப கவிஞர் வாலி நினைவு தினம் இன்று

கவிஞர் வாலி மறைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. கடந்த 2013ம் ஆண்டு இதே நாளில் வாலி அவர்கள் மறைந்தார்கள். தமிழ் சினிமாவில் இன்றும் நாம் மிக தீவிர விருப்பமாக கேட்டு ரசித்துகொண்டிருக்கும் பல அற்புத பாடல்களை இயற்றியவர் வாலி அவர்கள்.

வாலி அவர்கள் பாடலாசிரியர் மட்டுமல்லாது பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரை, பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் ஒரு சிறந்த இலக்கிய ஆளுமையும் ஆவார் இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதை தொகுப்புகள் புகழ்பெற்றவை.

கண்ணதாசன், கலைஞர், எம்.ஜி.ஆர்  இசைஞானி இளையராஜா போன்றோருடன் மிக நெருக்கமுடையவர் வாலி அவர்கள்.

தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுவது உண்டு. அவற்றில் எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இடம் பெற்ற வாலி இயற்றிய நான் ஆணையிட்டால் என்ற பாடலும் ஒரு காரணம் என்பதை அப்போதிருந்த தலைமுறை அறியும்.

மணிரத்னம் இயக்கி ரஜினி நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் ஹிட் என்பது எல்லாரும் அறிந்தது. வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயரும் தளபதி என்பதாகும்.

இளையராஜாவும் இவரும் இணைந்து கொடுத்த காதல் பாடல்கள் இன்றளவும் பலர் வசந்தம் வீசிய வாழ்வை திரும்பி பார்த்து இனிமையான நினைவுகளை அசைபோட கூடிய பாடல்களாகவே உள்ளன.

ரஹ்மானுடன் இணைந்த காதலர் தினம் பாடல்களும் மிக புகழ்பெற்றவை.

புகழ்பெற்ற ஒரு பாடலின் வரியை கேட்டவுடனே சொல்லிவிடலாம் இதுபோல வாலியால்தான் எழுத முடியும் என்று அப்படி ஒரு இனிமையான இக்கால இளசுகளையும் ஏங்க வைக்கும் ஒரு பாடல் சத்யா திரைப்படத்தில் இடம்பெற்ற வளையோசை கலகலவென பாடலாகும்.

மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள், காற்றுவாங்கபோனேன், கங்கை கரை மன்னனடி போன்ற அதிகமான ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் என இக்கால தலைமுறை வரை அவர்கள் நினைக்கும் விரும்பும் பாடல்களை கொடுத்துவிட்டு சென்ற வாலியை வாலிபக்கவிஞர் என்று சும்மாவா சொன்னார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News