×

யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் இன்று

கடந்த 1997ம் ஆண்டு வந்த அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் யுவன் சங்கர் ராஜா. பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனாக இருந்தாலும் தனக்கென ஒரு தனிப்பாதை வகுத்து தந்தையின் சாயல்கள் எதுவும் இல்லாமல் தனித்துவமான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை கொடுத்தார். முதல் படமான அரவிந்தனிலேயே பூவாட்டம் காயாட்டம் கண்களாட்டம், ஈரநிலா போன்ற பாடல்கள் யுவனின் திறமையை அனைவரையும் அறிய செய்த பாடல்களாகும். சரத்குமார் நடித்த ரிஷி படப்பாடல்கள், அஜீத் நடித்த
 
யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் இன்று

கடந்த 1997ம் ஆண்டு வந்த அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் யுவன் சங்கர் ராஜா. பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனாக இருந்தாலும் தனக்கென ஒரு தனிப்பாதை வகுத்து தந்தையின் சாயல்கள் எதுவும் இல்லாமல் தனித்துவமான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை கொடுத்தார்.

முதல் படமான அரவிந்தனிலேயே பூவாட்டம் காயாட்டம் கண்களாட்டம், ஈரநிலா போன்ற பாடல்கள் யுவனின் திறமையை அனைவரையும் அறிய செய்த பாடல்களாகும்.

சரத்குமார் நடித்த ரிஷி படப்பாடல்கள், அஜீத் நடித்த தீனா படப்பாடல்கள் இவரை சினிமாவில் கொஞ்சம் பிஸியாக்கியது, தொடர்ந்து செல்வராகவனின் காதல் கொண்டேன்,7ஜி ரெயின்போ காலனி, துள்ளுவதோ இளமை படப்பாடல்கள் அனைத்துமே மியூசிக்கல் ஹிட் ஆகின. அதை தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு சிறப்பான முறையில் இசையை யுவன் தொடர்ந்து வழங்கினார்.

வெங்கட் பிரபுவின் கூட்டணியில் சென்னை 6000028 மிகப்பெரும் வெற்றி பெற்ற மியூசிக்கல் ஹிட் படம்

தந்தையை போலவே பாடலில் மட்டுமல்லாது பின்னணி இசையிலும் வல்லவர் யுவன் அஜீத் நடித்த பில்லா படத்தின் பின்னணி இசை பட்டையை கிளப்பியது.அதைப்போல அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் பட்டையை கிளப்பியது.

அஜீத் ரசிகர்கள் பலரின் செல்போன் ரிங்டோனாக இந்த இரண்டு படங்களின் பின்னணி இசையே ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அரவிந்தனில் அறிமுகமாகி இருந்தாலும் அவரது தந்தை இசையமைத்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலேயே சிறு குழந்தை குரலில் பின்னணி பாடி இருப்பார்கள். அதே போல் யுவன் தனது தந்தையின் ஆலோசனைப்படி மிக சிறு வயதிலேயே ஆனந்த் படத்தில் இடம்பெற்ற பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பாடலின் இசைக்கோர்ப்பு வேலையை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யுவன்.

From around the web

Trending Videos

Tamilnadu News