×

மறக்க முடியாத கலைஞர்-கண்ணீர் நினைவுத்துளிகள்

60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், சினிமா, பேச்சு, எழுத்து என அனைத்திலும் ஒப்பற்ற தன்னிகரற்ற தலைவராக விளங்கியவர் கலைஞர் அவர்கள். ஏழைகளிடத்திலும் அனைவரின் பால் இரக்கம் கொண்டவர் கலைஞர் கருணாநிதி, யாரும் அரசியல்வாதியோ, சினிமா, இலக்கிய பிரமுகரோ அவர் பெரிய ஆளுமையாக இல்லாத மனிதராக இருந்தாலும் இறந்துவிட்டால் முதலில் இரங்கல் தெரிவிப்பது கலைஞர் மட்டுமே, மகனோ மனோகரா பொறுத்தது போதும் பொங்கி எழு, என்ற உணர்ச்சி மிகு வசனம் எப்பேற்ப்பட்ட மனிதனுக்கும் வீரத்தை வரவழைக்கும். கண்ணகிக்கு சிலை
 
மறக்க முடியாத கலைஞர்-கண்ணீர் நினைவுத்துளிகள்

60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், சினிமா, பேச்சு, எழுத்து என அனைத்திலும் ஒப்பற்ற தன்னிகரற்ற தலைவராக விளங்கியவர் கலைஞர் அவர்கள்.

ஏழைகளிடத்திலும் அனைவரின் பால் இரக்கம் கொண்டவர் கலைஞர் கருணாநிதி, யாரும் அரசியல்வாதியோ, சினிமா, இலக்கிய பிரமுகரோ அவர் பெரிய ஆளுமையாக இல்லாத மனிதராக இருந்தாலும் இறந்துவிட்டால் முதலில் இரங்கல் தெரிவிப்பது கலைஞர் மட்டுமே,

மகனோ மனோகரா பொறுத்தது போதும் பொங்கி எழு, என்ற உணர்ச்சி மிகு வசனம் எப்பேற்ப்பட்ட மனிதனுக்கும் வீரத்தை வரவழைக்கும்.

கண்ணகிக்கு சிலை வைத்தது மட்டுமின்றி, இலக்கியங்கள் மேல் கொண்ட தீராக்காதல் காரணமாகவும் கண்ணகியின் வரலாற்றை உலகிற்கு எடுத்து சொல்ல அதிக பிரயத்தனப்பட்டவர் கலைஞர் அவர்கள்.

பூம்புகாரில் கண்ணகி, கோவலன், சம்பந்தமான வரலாறுகளை சிற்பங்களாகவும் பூம்புகாரில் இருக்கும் எந்த ஒரு இடமும் இவர் பெயர் பொறித்த கல்வெட்டோடுதான் காட்சியளிக்கும். பூம்புகார் காவல் நிலையம் உட்பட

நகைச்சுவை உணர்வு மிக்க கலைஞர் கடந்த 1996ல் நடந்த பர்கூர் தேர்தலின்போது மிகப்பெரும் ஆளுமையாகவும் அதுவரை ஆளும்கட்சியாக இருந்த அதிமுக பொதுச்செயலாளர் மறைந்த ஜெயலலிதாவை தோற்கடித்த மிக ஒல்லியான தேகமுடைய சுகவனம் என்ற வேட்பாளரை யானை காதில் புகுந்த எறும்பு என்று வர்ணித்தவர் கலைஞர்.

90 ல் இவர் ஆட்சி கலைக்கப்பட்டபோது கூட கவலையில் இருந்த சமயத்தில் பிரபல நரம்பியல் டாக்டர் மறைந்த ராமமூர்த்தி அவர்கள் சந்தித்து கடைசியில குடியரசுத்தலைவர் கையெழுத்து போட்டு கலைச்சிட்டாரு போல என்று கேட்டதற்கு கடைசியாகத்தான் கையெழுத்து போட முடியும் என்று சொன்னாராம்.

கருணாநிதி பிறந்ததும் இறந்ததும் செவ்வாய்க்கிழமை என்பதும் சூரியன் மறையும் மாலை நேரத்திலேயே அவரும் மறைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாளையங்கோட்டை சிறையில் நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்தவர் பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அஞ்சாமல் இருந்தவர் யார் இந்த கலைஞரின் புகழினை பார் என்ற நாகூர் ஹனிபாவின் பாடல் வரிகளில்தான் இவர் தேர்தல் பிரச்சாரம் அநேக இடங்களில் நடக்கும்.

காலையில் சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து எழுத்துப்பணிகளில் ஈடுபடுவது கலைஞரின் சிறப்பு.

பராசக்தி, பாசப்பறவைகள், மந்திரிகுமாரி,பாடாத தேனீக்கள், பாலைவன ரோஜாக்கள்,

பூம்புகார், மறக்க முடியுமா போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய கலைஞர் டாக்டர் மு .கருணாநிதியின் இறப்பு மறக்க முடியாத நிகழ்வாகவே ஆகி விட்டது

எங்களின் கண்ணீர் அஞ்சலி

From around the web

Trending Videos

Tamilnadu News