×

திருப்தி இல்லாத ஷங்கர் – இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தம்

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி பெறும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன்-2’ என்ற பெயரில் தயாராகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால், கமல்ஹாசன் கல்லூரி மாணவர்களை சந்திப்பது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே, இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்கிறதா என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. இந்தியன்2- விற்கு கமல்ஹாசனுக்கு போடப்பட்ட
 
திருப்தி இல்லாத ஷங்கர் – இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தம்

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி பெறும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன்-2’ என்ற பெயரில் தயாராகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது.

ஆனால், கமல்ஹாசன் கல்லூரி மாணவர்களை சந்திப்பது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே, இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்கிறதா என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.

திருப்தி இல்லாத ஷங்கர் – இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தம்

இந்தியன்2- விற்கு கமல்ஹாசனுக்கு போடப்பட்ட இந்தியன் தாத்தா தொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. ஆனால், அது பழைய இந்தியன் தாத்தா கெட்-அப் அளவிற்கு இல்லை என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. அதோடு, ஷங்கருக்கும் இதில் திருப்தி இல்லை என்பதால் படப்பிடிப்பு சிறிது நாட்களுக்கு நிறுத்தப்பட்டிருப்பதாக பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது.

ஷங்கருக்கு திருப்தி அளிக்கும் அளவுக்கு இந்தியன் தாத்தா மேக்கப் அமையும் போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News