×

10 படத்தில் நடிப்பதை தடுத்து விட்டார் – ஷங்கர் மீது வடிவேலு புகார்

Actor vadivelu – ஷங்கரின் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் பல படங்களில் நடிப்பதை தடுத்துவிட்டார் என வடிவேலு புகா ர் கூறியுள்ளார். ஷங்கரின் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு துவங்கிய வேகத்திலேயே நின்றது. இப்படத்தில் நடிக்க வடிவேலு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததே இதற்கு காரணம் எனகூறப்பட்டது. அதனால், இப்படத்தில் நடிக்க வடிவேலு ஆர்வம் காட்டாததால் ஷங்கருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. எனவே,
 
10 படத்தில் நடிப்பதை தடுத்து விட்டார் – ஷங்கர் மீது வடிவேலு புகார்

Actor vadivelu – ஷங்கரின் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் பல படங்களில் நடிப்பதை தடுத்துவிட்டார் என வடிவேலு புகா ர் கூறியுள்ளார்.

ஷங்கரின் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு துவங்கிய வேகத்திலேயே நின்றது. இப்படத்தில் நடிக்க வடிவேலு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததே இதற்கு காரணம் எனகூறப்பட்டது. அதனால், இப்படத்தில் நடிக்க வடிவேலு ஆர்வம் காட்டாததால் ஷங்கருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. எனவே, தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிற்கு ரெட் கார்ட் தடை விதித்தது. எனவே, வடிவேலு எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ட்ரெண்டான நேசமணி கதாபாத்திரம் குறித்து ஒரு பேட்டியில் கூறிய வடிவேலு ‘ஷங்கரின் ஒரு படத்தில் நடிக்கவில்லை என்பதற்காக 10 படங்களில் நடிக்கும் வாய்ப்பு போய்விட்டது’ என வடிவேலு விரக்தியுடன் கூறியுள்ளார்.
ஏற்கனவே, தனது சினிமா வாழ்க்கையை தயாரிப்பாளர் சங்கம் அழிக்கப்பார்க்கிறது என வடிவேல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News