×

படிக்காதவன் படத்தில் வடிவேலு – வைரலாகும் புகைப்படம்

சுராஜ் இயக்கத்தில் தனுஷ், தமன்னா, விவேக், சுமன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் படிக்காதவன். இப்படத்தில் டுபாக்கூர் டான் வேடத்தில் விவேக் நடித்திருப்பார். தனுஷின் காதலுக்கு அவர் உதவுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். மேலும், ஆந்திரா சென்று அங்கு பெரும் ரவுடியான சுமனிடம் அவர் பீலா விட்டு அடி வாங்கும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. உண்மையில், விவேக் நடித்த வேடத்தில் முதலில் வடிவேலுதான் நடித்திருந்தார். சில நாட்கள்
 
படிக்காதவன் படத்தில் வடிவேலு – வைரலாகும் புகைப்படம்

சுராஜ் இயக்கத்தில் தனுஷ், தமன்னா, விவேக், சுமன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் படிக்காதவன்.

இப்படத்தில் டுபாக்கூர் டான் வேடத்தில் விவேக் நடித்திருப்பார். தனுஷின் காதலுக்கு அவர் உதவுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். மேலும், ஆந்திரா சென்று அங்கு பெரும் ரவுடியான சுமனிடம் அவர் பீலா விட்டு அடி வாங்கும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

படிக்காதவன் படத்தில் வடிவேலு – வைரலாகும் புகைப்படம்

உண்மையில், விவேக் நடித்த வேடத்தில் முதலில் வடிவேலுதான் நடித்திருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொண்டார். ஆனால், இயக்குனர் சுராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்திலிருந்து அவர் விலகினார். அதன் பின்னரே அவருக்காக வடிவமைக்கப்பட்ட வேடத்தில் விவேக் நடித்திருந்தார்.

இந்நிலையில், தனுஷ் மற்றும் சுராஜுடன் டான் கெட்டப்பில் படப்பிடிப்பில் வடிவேலு அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News