×

ரொம்ப ஓவராத்தான் போறீங்க.. குத்தாட்டம் போடும் நித்தியானந்தா பெண் சீடர்கள். வைரல் வீடியோ

நித்தியானந்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அவரின் ஆசிரமத்தில் பெண் சீடர்கள் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி தனி நாடாக அறிவிக்க அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அந்நாட்டிற்கு கைலாச நாடு எனவும் பெயர் வைத்தார். ஆனால், அவரின் கோரிக்கையை ஈக்குவடார் அரசு நிராகரித்துவிட்டது. தற்போது நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என குஜராத்
 
ரொம்ப ஓவராத்தான் போறீங்க.. குத்தாட்டம் போடும் நித்தியானந்தா பெண் சீடர்கள். வைரல் வீடியோ

நித்தியானந்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அவரின் ஆசிரமத்தில் பெண் சீடர்கள் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி தனி நாடாக அறிவிக்க அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அந்நாட்டிற்கு கைலாச நாடு எனவும் பெயர் வைத்தார். ஆனால், அவரின் கோரிக்கையை ஈக்குவடார் அரசு நிராகரித்துவிட்டது.

தற்போது நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என குஜராத் மற்றும் கர்நாடக மாநில காவல்துறை தேடி வருகிறது. ஆனால், அவர் தினம் தினம் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பான கருத்துகளை கூறி வருகிறார்.

இந்நிலையில், அவரது ஆசிரமத்தில் பெண் சீடர்கள் படையப்பா படத்தில் இடம் பெற்ற வெற்றிக்கொடிகட்டு பாடலுக்கு குத்தாட்டம் போடும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News