×

மீண்டும் அட்லியுடன் சேர்ந்த விஜய்

விஜய் அட்லீ கூட்டணி இணைந்தாலே அது மிகப்பெரிய வெற்றி படமாக தான் அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டனா். முதன் முதலாக தெறி படத்தின் மூலம் விஜய் – அட்லீ கூட்டணி இணைந்தது. முதல் படமே வெற்றி படமாக அமைந்த காரணத்தால் இரண்டாவது முறையாக கைகோ்த்து உருவான படம் மெர்சல். இந்த படமும் பிரம்மாண்ட ஹிட்டை கொடுத்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றி கூட்டணியானது மூன்றாவது முறையாக இணைய உள்ள தகவல்
 
மீண்டும் அட்லியுடன் சேர்ந்த விஜய்

விஜய் அட்லீ கூட்டணி இணைந்தாலே அது மிகப்பெரிய வெற்றி படமாக தான் அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டனா். முதன் முதலாக தெறி படத்தின் மூலம் விஜய் – அட்லீ கூட்டணி இணைந்தது. முதல் படமே வெற்றி படமாக அமைந்த காரணத்தால் இரண்டாவது முறையாக கைகோ்த்து உருவான படம் மெர்சல். இந்த படமும் பிரம்மாண்ட ஹிட்டை கொடுத்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றி கூட்டணியானது மூன்றாவது முறையாக இணைய உள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது தளபதி ரசிகா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மிகப்பெரிய தயாரிப்பாளரான தாணு போன்றவர்களுக்கே புதுமையான அனுபவத்தை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. அவர் படத்தில் அந்தளவுக்கு அதிக சம்பளத்தை பெற்றுக்கொடுத்தவர் என்றால் அட்லீ தான்.

அட்லீ என்றால் உடனே ஓகே சொல்லும் அளவிற்கு உயர்த்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். தளபதி விஜய் அவரை எக்கசக்கமாக நம்புவதால் கூட என்றும் சொல்லலாம். அதனால் தான் என்னவோ அட்லீ காட்டில் அடைமழை அடித்து கொண்டிருக்கிறது. அவா்களுடைய அடுத்த அதிரடியாக ஏஜிஎஸ் நிறுவனம்ம தயாரிக்கும் படத்தில் இணைய உள்ளார்கள். இந்த படத்திற்கு விஜய் எவ்வளவு சம்பளம் என்றால் நாம் அனைவரும் வாயடைத்து போய் விடுவோம். அதோடு இயக்குனர் அட்லீ சம்பளத்தை கேட்டாலே தலைசுற்றி விடும். விஜய்க்கு சம்பளம் ஐம்பது கோடி. அட்லீக்கு 22 கோடி என்று தகவலில் கூறப்படுகிறது. சிக்கனத்தை கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் இந்த கூட்டணியிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். விஜய் ரசிகா்களுக்கு இனி கொண்டாட்டம் தான். தினம் ஒரு தகவலாக அந்த படத்தை பற்றி அப்பேட்டை வழங்கி கொண்டிருப்பார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News