×

விஜய், லோகேஷ் கனகராஜ் படத்தின் டைட்டில் ’சம்பவம்’ – கிளம்பியது புது வதந்தி !

விஜய் தற்போது நடித்து வரும் படத்துக்கு சம்பவம் எனப் பெயரிடப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிகில் படத்தை அடுத்து விஜய் இப்போது மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக விஜய் 64 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த படம் கமல் நடித்த நம்மவர்
 
விஜய், லோகேஷ் கனகராஜ் படத்தின் டைட்டில் ’சம்பவம்’ – கிளம்பியது புது வதந்தி !

விஜய் தற்போது நடித்து வரும் படத்துக்கு சம்பவம் எனப் பெயரிடப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிகில் படத்தை அடுத்து விஜய் இப்போது மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக விஜய் 64 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தின் இரண்டு கட்ட  படப்பிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த படம் கமல் நடித்த நம்மவர் படத்தின் தழுவல் என்று ஒரு செய்தி உலாவர, மருத்துவத்துறை சம்மந்தப்பட்ட படம் என்பதால் ‘டாக்டர்’ என்ற ஒரு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது சம்பவம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதேப் பெயரில் ஏற்கனவே ஒரு படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. வாரத்துக்கு ஒரு பெயராக ரசிகர்களாக கற்பனை செய்து அதற்கான போஸ்டர்களையும் வெளியிட்டு வருகின்றன. இதனால் படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமான தலைப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News