×

மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய விஜய்

நீட் தேர்வினால் மருத்துவக் கனவு நிறைவேறாத மனஉளைச்சலில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அனிதா மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு வகையில் போராடி வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், அனிதாவின் இறுதிச்சடங்குக்கு ஏராளமான சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் சென்று
 
மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய விஜய்

நீட் தேர்வினால் மருத்துவக் கனவு நிறைவேறாத மனஉளைச்சலில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அனிதா மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு வகையில் போராடி வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், அனிதாவின் இறுதிச்சடங்குக்கு ஏராளமான சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல், இரங்கல் செய்திகளையும் வெளியிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய், அனிதா குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அனிதாவின் புகைப்படத்துக்கு கீழே சக உறவினர்போல தரையில் அமர்ந்து அனிதாவின் அப்பாவுக்கு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு பணம் உள்ளிட்ட எந்தவித உதவி தேவைப்பட்டாலும் தான் செய்ய தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News