×

வடிவேலுவிற்கு சித்தம் கலங்கிப் போச்சு – விஜய் மில்டன் கண்டனம்

Actor vadivelu – இயக்குனர் சிம்பு தேவன் மற்றும் ஷங்கர் ஆகியோர் குறித்து வடிவேலு தெரிவித்த கருத்துகளுக்கு திரையுலகில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படம் வடிவேலுவின் ஈகோ பிரச்சனை காரணமாக அப்படியே கைவிடப்பட்டது. இதனால் இப்படத்தின் தயாரித்த இயக்குனர் ஷங்கருக்கு சில கோடிகள் நஷ்டம் ஆனது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி கொடுத்த வடிவேல் இயக்குனர் சிம்பு தேவனுக்கு ஒன்றும் தெரியாது எனக்கூறியதோடு, அவரை அவன்.. இவன்
 
வடிவேலுவிற்கு சித்தம் கலங்கிப் போச்சு – விஜய் மில்டன் கண்டனம்

Actor vadivelu – இயக்குனர் சிம்பு தேவன் மற்றும் ஷங்கர் ஆகியோர் குறித்து வடிவேலு தெரிவித்த கருத்துகளுக்கு திரையுலகில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படம் வடிவேலுவின் ஈகோ பிரச்சனை காரணமாக அப்படியே கைவிடப்பட்டது. இதனால் இப்படத்தின் தயாரித்த இயக்குனர் ஷங்கருக்கு சில கோடிகள் நஷ்டம் ஆனது.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி கொடுத்த வடிவேல் இயக்குனர் சிம்பு தேவனுக்கு ஒன்றும் தெரியாது எனக்கூறியதோடு, அவரை அவன்.. இவன் என ஒருமையில் பேசினார். மேலும், இயக்குனர் ஷங்கருக்கும் ஒன்னும் தெரியாது. கிராபிக்ஸை வைத்துக்கொண்டு பொழைப்பை ஓட்டி வருகிறார் என கடுமையாக விமர்சித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மூடர் கூடம் நவீன் முதல் பலரும் வடிவேலுவை கண்டித்திருந்தனர்.

இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் “தலையில் சுத்தியல் விழுந்தால் சில வருடம் கழித்து கூட சித்தம் கலங்கும் போல!உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருக்கிறோம் அய்யா நேசமணி அவர்களே.. ஏணிகளை எட்டி மிதித்து அதை கெடுத்துக் கொள்ளாதீர்கள்” என பதிவிட்டுள்ளார். அதேபோல், சமுத்திரக்கனி, வெங்கடபிரபு, சுசீந்திரன் என பலரும் வடிவேலுவை கண்டித்து பதிவிட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News