×

விஜய் சேதுபதி வெளியிட்ட உருக்கமான டிவீட்!!!

கஜா புயல் பாதிப்புகளுக்கு உதவிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நடிகர் விஜய் சேதுபதி உருக்கமான டிவீட்டை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கஜா புயலால் கோராதாண்டவம் ஆடியதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் நிவாரணம் அளிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், திரையுலகினர், தொழிலதிபர்கள், சமுக நல ஆர்வலர்கள் என பலர் உதவி செய்து வருகின்றனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகியவை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. ஏராளமானோர் தங்கள் வீடுகளை இழந்து, தங்குவதற்கு
 
விஜய் சேதுபதி வெளியிட்ட உருக்கமான டிவீட்!!!

கஜா புயல் பாதிப்புகளுக்கு உதவிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நடிகர் விஜய் சேதுபதி உருக்கமான டிவீட்டை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கஜா புயலால் கோராதாண்டவம் ஆடியதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் நிவாரணம் அளிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், திரையுலகினர், தொழிலதிபர்கள், சமுக நல ஆர்வலர்கள் என பலர் உதவி செய்து வருகின்றனர்.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகியவை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. ஏராளமானோர் தங்கள் வீடுகளை இழந்து, தங்குவதற்கு கூட வீடின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில்  கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண பொருட்களை தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். 10 கோடி ரூபாய் பணம்  வழங்குவதாகவும் கூறியிருக்கிறார்.

 

இதனியடையே விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் புயல் தாக்கிய அடுத்த நாளே நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு இன்று தமிழர்களின் துயரை துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன் என உருக்கமாக டிவீட் போட்டிருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News