×

மாமனிதன் படத்தில் ஆட்டோ டிரைவராக நடிக்கும் விஜய்சேதுபதி!

சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனு ராமசாமி விஜய்சேதுபதியை வைத்து `தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து சீனுராமசாமி, விஜய் சேதுபதி, விஷ்ணு விஷாலை வைத்து `இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கினார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை.அதையடுத்து நீண்ட நாட்களாக படம் எடுக்காமல் இருந்த சீனுராமசாமி, விஜய்சேதுபதி, தமன்னாவை வைத்து தர்மதுரை படத்தை எடுத்தார். இந்த படம் பெரும்
 
மாமனிதன் படத்தில் ஆட்டோ டிரைவராக நடிக்கும் விஜய்சேதுபதி!

சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனு ராமசாமி விஜய்சேதுபதியை வைத்து `தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து சீனுராமசாமி, விஜய் சேதுபதி, விஷ்ணு விஷாலை வைத்து `இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கினார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை.அதையடுத்து நீண்ட நாட்களாக படம் எடுக்காமல் இருந்த சீனுராமசாமி, விஜய்சேதுபதி, தமன்னாவை வைத்து தர்மதுரை படத்தை எடுத்தார். இந்த படம் பெரும் சூப்பர் ஹிட்டானது. இதனால் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக மாமனிதன் என்ற படத்தில் இணைந்துள்ளது.

மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில் தற்போது தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்கிறார்கள். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News