×

விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தின் 2வது லுக் போஸ்டர் வௌியீடு!

‘செக்கச்சிவந்த வானம்’, ’96’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ‘சீதக்காதி’. இந்த வருடம் 5 படங்கள் வெளியான நிலையில் அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் 2வது முறையாக இணைந்துள்ளனர். இப்படமானது விஜய் சேதுபதிக்கு 25வது படமாகும். இந்த படத்தில் ‘அய்யா’ கதாபத்திரத்தில் நடிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி
 
விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தின் 2வது லுக்  போஸ்டர் வௌியீடு!

‘செக்கச்சிவந்த வானம்’, ’96’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ‘சீதக்காதி’.

இந்த வருடம் 5 படங்கள் வெளியான நிலையில் அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் இயக்குநர்
பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் 2வது முறையாக இணைந்துள்ளனர்.

இப்படமானது விஜய் சேதுபதிக்கு 25வது படமாகும். இந்த படத்தில் ‘அய்யா’ கதாபத்திரத்தில் நடிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது.

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது லுக் இன்று மாலை வெளியாகியது. ரசிகர்களிடையே அதிகமாக வைரலாகிவருகிறது.

இதனையடுத்து, ‘சீதக்காதி’ படத்திற்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தில் வெளியான சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

‘பேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோர்
நடித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News