×

என்னானது நயன்தாராவின் கொள்கை?

நயன்தாரா பெரிய நடிகா்களின் படங்களில் இனி ஜோடியாக நடிப்பது இல்லை என்ற கொள்கையில் இருந்தார். ஏனெனில் பெரிய ஹீரோக்கள் படம் என்றால் மரத்தை சுற்றி வந்து டூயட் பாடி ஆடுவதுடன் வேலை முடிந்துவிடும். அதனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்றால் அப்படியில்லை. கதைக்கு தான் முக்கியத்துவம் அதிகம் இருக்கும் என்ற காரணத்தால் அந்த முடிவை எடுத்திருந்தார். அப்படி நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த டோரா, அறம் போன்ற படங்களில் நடித்தார்.அதில் அறம் படமானது நல்ல வரவேற்பை பெற்றது.
 
அதனை தொடா்ந்து கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள்,கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது நயன்தாரா பெரிய நடிகா்களின் படங்களில் தான் நடித்து வருகிறார். சிவா அஜித்தை வைத்து இயக்கும் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். நயனுக்கு அஜித் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் கொள்கையை விட்டுக்கொடுத்து விட்டார்.

ஆனால் ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும், அரசியல் களம் இறங்கியுள்ள நம்ம உலகநாயகன் கமலை வைத்து ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்திலும் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இவருடன் நயன்தாரா ஐந்தாவது முறையாக இணைய உள்ளாராம். அதுவும் தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார்களாம். மறைந்த ஆந்திர முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் யாத்ரா என்றகிற படத்தில் மறைந்த முதல்வா் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் கேரக்டரில் நடிக்கும் மம்முட்டி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாரம்.

ஏற்கனவே நயன் இயக்குநா் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தெலுங்கு நடிகா் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஜெய் சிமஹா படத்தில் தனது கொள்கையை விட்டு கொடுத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News